02.06.07

Dead Links Report

Posted in Uncategorized at 1:06 pm by Thenkoodu Support

Our dead link analysis found, the following links in the aggregator are not valid; and will be removed shortly.

http://chaththiriyan.blogspot.com/atom.xml
http://www.kirukkalgal.com/blog/xml-rss2.php
http://nagore-mani.blogspot.com/atom.xml
http://seppuppaddayam.blogspot.com/atom.xml
http://jeevaadmaa.blogspot.com/feeds/posts/default
http://kuravanji.blogspot.com/atom.xml
http://deva-thiru.blogspot.com/atom.xml
http://pgs-manian.blogspot.com/atom.xml
http://nilavinkaraihal.blogspot.com/atom.xml
http://agnisiragu.blogspot.com/atom.xml
http://bommalattam.blogspot.com/atom.xml
http://seeking-spring.blogspot.com/atom.xml
http://vikatanbooks.blogspot.com/atom.xml
http://villiputhursri.blogspot.com/atom.xml
http://atpillai.blogspot.com/atom.xml
http://muthuvinsports.blogspot.com/atom.xml
http://vaiyyam.blogspot.com/atom.xml
http://ennam.blogspot.com/atom.xml
http://appaviarumugam.blogspot.com/atom.xml
http://anniyan2006.blogspot.com/atom.xml
http://asankaran.wordpress.com/feed/
http://deepakvenkatesan.blogspot.com/atom.xml
http://ilaiyavan.blogspot.com/atom.xml
http://harinet.blogspot.com/atom.xml
http://karmegaraja.blogspot.com/atom.xml
http://thulihal.blogspot.com/atom.xml
http://aaradhanas.blogspot.com/atom.xml
http://kabhika.blogspot.com/atom.xml
http://gundakkamandakka.blogspot.com/atom.xml
http://kuppai.blogspot.com/atom.xml

Sudar - Relay game

Posted in அறிவிப்புகள் at 10:49 am by Thenkoodu Support

Hello Everyone!

After the grand success of Thenkoodu-Tamiloviam contests, our team is coming up with an interesting idea to bring up the talents of bloggers in a very light way! That’s what you’ve been seeing on the home page “sudar” - lantern!!

What is it?

Well, you know thenkoodu always have the vision of bringing out talents from bloggers and in support of good writings in tamil blogs. Further we also believe on creativity. If contests are a way to do things, why not games?! :-)

Sudar game is quite simple, just a Q & A.

Does this game should have only light questions and answers?
No..
That means it should be serious questions?
Not either!

All we can say is it’s just a platform for bloggers to show/reveal there talents in a light and creative way.

Believe us, it’ll all be fun and good learning process to all of us! :-)

Our thanks to ‘vettipayal’ for that nice inauguration ceremony.

Watch the game and be prepared to play! Remember, the game ends by April 14th.

Yours,
Team.

————–

தேன்கூடு தமிழோவியம் மெகா வெற்றிகளுக்குப் பிறகு, இதோ தேன்கூடு குழு வழங்குகிறது ‘சுடர் - ஒரு சுவாரசியமான தொடர் விளையாட்டு‘ .

தேன்கூடு நல்ல எழுத்துக்களை உற்சாகப்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். போட்டிகள் ஒரு வழி என்றால் விளையாட்டும் ஒரு வழிதானே! :-)

உங்கள் கற்பனைகள்/திறமைகளை புதுவிதத்தில் வெளிப்படுத்த இந்த விளையாட்டு துணை நிற்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ரொம்ப சுலபம் - கேள்விகள் & பதில்கள். உங்களிடம் வீசப்படும் கேள்விகளை நீங்கள் எப்படி பதில் சொல்கிறீர்கள் என்பதும் நீங்கள் கேட்கும் கேள்விகள் எப்படி கையாளப்படுகிறது என்பதுமே இங்கு திறமையை நிரூபிக்கும் சவால்! கொஞ்ச நாள் நாமும் தான் ‘மதன்’களாகிப் பார்ப்போமே! கேள்விகள் ஜாலியாகவும் இருக்கலாம், சீரியஸாகவும் இருக்கலாம். எப்படி இருப்பினும் நம் அனைவருக்கும் இந்த விளையாட்டு சுவாரசியமானதாகவும் நிறைய அறிந்து கொள்ளத்தக்கதாகவும் இருக்கப்போகிறது என்பது நிச்சயம்.:-)

சுடர் உங்களிடம் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். கேள்வி கேட்கவும், பதில் அளிக்கவும் ரெடியா இருங்க! உங்கள் உற்சாகமே எங்கள் ஊக்கம்!!

துவங்கி வைத்த ‘வெட்டிப்பயல்’ அவர்களுக்கு எங்களின் நன்றிகள்.

அன்புடன்,
தேன்கூடு குழு.

01.25.07

[Buzz] What we’ve been working on…

Posted in மேம்பாடு at 3:22 am by Thenkoodu Support

We included links of related popular tamil news websites in the “News” Section of the portal. We believe this will be more relevant and convenient. If you feel any other link could be there, do suggest the link. (Our link ordering is mostly based on google page rank!)

We did some minor enhancements to ezines page to increase the speed of the page rendering. We ‘ve included “viruba” site link and other emagazines site links in that page. Again, we are sure we have missed a lot. Do suggest for the same.

For the purpose of suggesting websites to us, we have used a directory interface. As of now, it is named as Thenkoodu Directory Project (well, do you have a better name? do let us know). You can also contribute to this project which could be populated as a good list of valid links to various tamil sites and blog related sites over a period of time. Send us your suggestions on categories as well. The url for this is : http://dir.thenkoodu.com

**********

நம்ம குழு, தொடர்ந்து வாசகர்களோட பயன்பாட்டினை சிந்திச்சுகிட்டுதான் இருக்காங்க. இப்ப கூட பாருங்க, மேல என்ன சொல்லிருக்காங்கண்ணா.. அவசியமான தொடுப்புகள் பலவற்றை செய்தி, மின்னிதழ்கள் பக்கங்களில் குடுத்திருக்காங்களாம். எல்லாம் சரியா இருக்கா? வேற எதுனாச்சும் சேர்க்கணுமா? பார்த்து சொல்லுங்க.

இதுல பாருங்க, இப்படி எத்தனையோ சுட்டிகள் இருக்கே, இதெல்லாம் ஒரு இடத்தில இருந்தா நல்லாருக்கும் அப்படின்னு தோணும்ல…? அதுக்காகவே தேன்கூடு தொடுப்புகள் தொகுப்பகம் ஒண்ணு பண்ணியிருக்காங்க. அதுக்கு கூட உங்களின் உதவிகளைச் செய்யலாம். ரொம்ப ஒண்ணும் இல்லை. ஏற்கனவே உள்ள வகைகளுக்கு, உங்களுக்குத் தெரிஞ்ச ‘தொடுப்பு’களை இணையுங்க. புதுசா என்ன வகைகள் வேணும் அப்படின்னு ஒரு வார்த்தை எழுதிப் போடுங்க. அப்புட்டுத்தேன்!

ம்… வழக்கம்போல பீட்டாதான்னு டீம்ல பேசிக்கிறாங்க :-)

அன்புடன்,
தேன்கூடு நண்பர்கள் குழு.

01.11.07

Site status update (Update on 14th)

Posted in மேம்பாடு at 8:00 pm by Thenkoodu Support

1) There seem to be a failure in ThirattiG’s feeds. Google’s Blog search mechanism which is an underlying architecture for the ThirattiG seem to have been changed. We hope to find alternatives.

(Update: Due to problem with the search mechanism of Gooogle, we display only blogspot blogs )

2) We have been reported of issues related to wrong images are shown for the post preview images. This normally happens due to certain special characters in the image or URL. (The wrong image itself is might be a previously cached one.) We are working on fixing the problem. In case if you are one of a victim, please send us your blog post URL.

3) Some users have said.. they have to do many pings for the aggregator to aggregate the feed. It’s more than 10+ times we believe. Kind of bad thou :-( .

Once a blog post is ping-ed and/or successfully aggregated, please give the system a breathing (caching :-)) time for the next post to get aggregated! (Tip: a repeated pinging does works!!)

We’ll soon try to fix the issues 2 & 3 … but we are keeping them in a kind of low profile since we are quite busy with certain other enhancements and services, just for you!

01.06.07

தேனீ டாக் : Thenegoodu Sponsors Best Telugu Blogger!

Posted in அறிவிப்புகள், தேனீ டாக் at 5:42 am by Thenkoodu Support

ணக்கங்க..

தேன்கூடு நண்பர்கள் குழுவில் ‘சாம்பத்தூர் கெளரி சங்கர்’ மிக முக்கிய ஒரு நண்பர். இவரது விருப்பப்படி தேன்கூட்டின் தெலுங்கு பதிப்பு சுமார் 5 மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. (அண்ணாச்சிக்கு தமிழ் படிக்க லேது. ஆனால் பேசினா புரிஞ்சுப்பாரு)

[தேனீ2: அது சரி. இவங்களுக்கே தமிழ் ஒழுங்கா தெரியாது. பாதி நேரம் இங்கிலீஸ்லயே பேசி அறுப்பானுங்க..]

ஹ்ம்ம்… வழக்கம்போல பீட்டாதான்! :-) அதுவும் தவிர தளம் முழுசா அவரு கண்ட்ரோல்.. அதான் நம்ம பக்கத்தில கூட எழுதல.. ஆனாலும் என்ன.. இப்பத்தான் தெரிஞ்சுடுச்சுல்ல.. உங்க பக்கத்து தெலுங்கு நண்பர்கள் கிட்ட சொல்லி உபயோகப்படுத்தச் சொல்லுங்களேன்!

அப்புறம்.. வர்ற இண்டிபிளாக்ஸ் தேர்தலில் தேனேகூடு சிறந்த தெலுங்கு பிளாகருக்கான ஒரு பரிசினை ஸ்பான்ஸர் செய்கிறது. (ஏன் தமிழுக்கு இல்லையான்னு கேட்காதீங்க :-) தமிழுக்கு ஏற்கனவே நிறைய ஸ்பான்ஸர்ஸ் இருக்காங்க.. அதுவும் தவிர, தமிழின் சிறந்த வலைப்பதிவர் தேர்வினை நாமளே நடத்தலாம்ணு ஒரு எண்ணம் இருந்துச்சு. நேரம்தான் ஒத்துவரலை :-( (என்ன.. வர்ற வருசம் ஜமாய்ச்சுடலாமா? ஓ.. சரி சரி.. அப்படியே உங்க மத்த ஐடியாக்களையும் தட்டி விடுங்க..)

[தேனீ2: ‘தேனேகூடு‘ அவ்வளவா ஒண்ணும் ஓடல. ஏற்கனவே ஈ தான் ஓடிகிட்டிருக்கு. அதான் இப்படி ஸ்பான்ஸர் பண்ணியாவது பேர் வாங்க நினைக்கிறாங்க போல..]

வேற என்ன… தமிழின் முதல், ஒரே புத்தக்குறி தளம், பெட்டகம். (… அது என்ன புத்தகக்குறி தளம்? புரியலியா.. இதோ நம்ம பதிவர் சிறில் அலெக்ஸ் நல்லா எழுதியிருக்காரு பாருங்க. கூடவே நம்ம அறிவிப்பையும் கொஞ்சம் படிச்சு பாருங்க. இன்னமும் புரியலைனா, சொல்லுங்க.. மறுபடி விளக்கமா ஒரு இடுகை போட்டுடலாம்!)

உங்களுக்கு ஏதாவது ஒரு இடுகை அல்லது தளம் புடிச்சிருக்கா? சட்டுனு பெட்டகத்தில சேர்த்து விடுங்க. நாளைக்கு நீங்களே தேட வேண்டிய தேவை இல்லை பாருங்க.

[தேனீ2: எல்லாம் சரி, இந்த அதிகம் பார்வையிடப்பட்டவை எப்படி வருதுண்ணு இன்னும் நீங்க சொல்லவே இல்லியே]

இப்பல்லாம் இடுகைக்கு பக்கத்திலேயே அடைப்புக்குறிக்குள்ளாற சிகப்பு கலர்ல ஒரு எண் வருதுல்ல. அது அந்த இடுகையின் ஹிட் கவுண்ட். ‘அதிகம் பார்வையிடப்பட்டவை’ இதன் அடிப்படையில் வருவதுதான்.

[தேனீ2: ஓ.. இப்ப என்னா? இதெல்லாம் சொல்லிட்டா, தேன்கூட்டில் பிடித்தவர்கள் மட்டும்தான் டாப் 10ல் வருகிறார்கள் என்பது இல்லையென்றாகிவிடுமா? அதெல்லாம் முடியாது நாங்க சொன்னதையே சொல்லிகிட்டுதான் இருப்போம் :-)]

பை… பை…

- தேனீ1.

12.31.06

டிசம்பர் ‘06 போட்டி முடிவுகள்

Posted in அறிவிப்புகள், போட்டி at 5:41 pm by Thenkoodu Support

வலைஞர்களுக்கும், வாசகர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். சென்ற வருட டிசம்பர் மாத முதல் வாரத்தில் கருவாக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, மாதத்தின் மத்தியில் வலைப்பதிவர்களால் கண்டுகொள்ளப்பட்டு இன்று உங்கள் அனைவரின் அன்பிற்கும் பாத்திரமாகியிருக்கும் தேன்கூடு தொகுப்பகம் மற்றும் திரட்டியின் முதலாம் ஆண்டு நிறைவினில் உங்களுடன் இணைந்து எங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறோம்! இனி…

டிசம்பர் 2006 வலைப்பதிவுப் போட்டி முடிவுகள்

டிசம்பர் மாதத்தின் தேன்கூடு-தமிழோவியம் போட்டியின் வெற்றிக்கு துணை நின்ற வலைப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி.

போட்டியில் பங்கெடுத்துக்கொண்டு ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் எழுதிய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியில் வெற்றி பெற்ற வலைப்பதிவர்களுக்கு எங்களின் சிறப்புப் பாராட்டுகள்.

பின்னூட்டங்கள் மூலமாகவும், வாக்குப் பதிவில் கலந்து கொண்டு வாக்களித்தும் பதிவர்களை உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் எங்களின் நன்றிகள்.

போட்டி முடிவுகள்:

முதல் பரிசு -

Cyril கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை - அரைபிளேடு

இரண்டாவது பரிசு -

குறும்பு - நாமக்கல் சிபி

மூன்றாவது பரிசு -
SKகுறும்பெல்லாம் குறும்பா? - sk

நான்காவது இடத்தில் -

நந்தன் - ராம்

நடுவர் குழுவின் பார்வைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆக்கங்களுக்கும் ஆறுதல் பரிசு உண்டு.

தேன்கூடு-தமிழோவியம் மாதாந்திரப் போட்டிகள் வலைப்பதிவுகளின் சாத்தியக்கூறுகளையும், வலைப்பதிவர்களின் எல்லையற்ற திறமையையும் அவர்கள் பாணியிலேயே சுலபமாக சுவாரசியமாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு பயிற்சிக்களம் என்பது நீங்கள் அறிந்ததே. எழுத்துத்திறனையும் நல்ல எழுத்துக்களையும் உற்சாகப்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் வெற்றி தோல்வியை விட பங்கேற்பு என்பதே திறமையை நிரூபிக்கும் முயற்சி. அந்த விதத்தில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களையும் பாராட்டுவதில் மகிழ்கிறோம்.

போட்டியில் நடுவர்களாகச் செயல்பட இசைந்த சிறில் அலெக்ஸ், பாவண்ணன், வைகை செல்விஆகியோருக்கு எங்களின் நன்றிகள். நடுவர்களின் கணிப்பு மற்றும் போட்டியின் முடிவுகள் குறித்த புள்ளி விபரங்கள் கீழே பெட்டிகளில் காணலாம். ( போட்டியில் வலைப்பதிவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 14 ஆக்கங்கள் மட்டுமே, வாக்கெடுப்பு விபரங்கள் தெரிவிக்கப்படாமல் நடுவர்களுக்கு அனுப்பப்பட்டது. )

‘குறும்பு’ - தலைப்பினைக் கொடுத்ததுடன் மட்டுமல்லாது , அன்புடன் எங்களுடன் ஒத்துழைத்ததற்கும், போட்டி முடிவில் நடுவர்குழுவில் பங்கேற்று மதிப்பிட்டமைக்கும் திரு. சிறில் அலெக்ஸ் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

Paavannanபாவண்ணன், தமிழ்ச் சிறுகதைகளில் தனித்துவமான கதை சொல்லும் முறை கொண்டவர். பாண்டிச்சேரியில் பிறந்த இவர், தற்போது பெங்களூரில் வசிக்கிறார். கன்னட இலக்கியங்களைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்து, அதற்காக மொழி பெயர்ப்புக்கான ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று நீண்ட எழுத்து இயக்கம் கொண்டவர். இவரது ‘பாய்மரக் கப்பல்’ நாவல் குறிப்பிட்டத்தக்கதாகும். இணையத்திலும் சிறு பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதி வரும் பாவண்ணன், தொலைதொடர்புத் துறையில் வேலை செய்கிறார். குறிப்பு உதவி: எஸ்.ரா

வைகை செல்வி
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் முக்கியப்பொறுப்பில் பணிபுரியும் வைகை செல்வி கவிதைகள் கதைகள் என்று பல துறைகளிலும் தடம் பதித்தவர். மதுரையைச் சேர்ந்தவர். ‘வானகமே வையகமே’ என்ற மாசுக்கட்டுபாடு குறித்த
கவிதைகளுடனான உள்சுற்று பத்திரிக்கையை நடத்தி வருகிறார். இவரது பிளாஸ்டிக் மாசுகள் குறித்த புத்தகம் , தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது; மலையாளம்,தெலுங்கு,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.சிறந்த எழுத்தாளர், கவிஞர் போன்ற பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகளும், கவிதைகளும் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது சென்னையில் வசித்து வரும் இவர், கட்டுரைகள் மூலம் தனது கருத்துக்களை எழுதி வருகிறார். கடந்த ஒரு வருடங்களாக ‘அரும்பு’இதழில் தொடர்ந்து எழுதிவருகிறார்.

இவர் குறித்து மேலதிக விபரத்திற்கு வாசிக்க: http://www.hindu.com/mp/2006/12/09/stories/2006120901560200.htm

போட்டிக்கான இரண்டாம், மூன்றாம் பரிசுகளை வழங்க இயைந்த சென்னைலைப்ரரி, நிலாஷாப் தளங்களுக்கு எங்களின் நன்றிகள்.

வலைப்பதிவர்களில் திறமையானவர்களை உற்சாகப்படுத்துவதில் நீண்ட முன் அனுபவத்துடன் முன்னிலை வகிக்கும் தமிழோவியத்தின் முழுமையான துணை, ஆர்வம், உதவி இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் போட்டிகள் இவ்வளவு தூரம் களை கட்டியிருக்குமா என்பது சந்தேகமே! இணைய இதழ்களில் படைப்புகள் இடம்பெறுவது கூட இயலலாம். ஆனால், சிறப்பாசிரியர் பதவி என்பது ஒரு சீரிய அங்கீகாரம். சுவையான சுமை. இத்தகைய வாய்ப்பினை வெற்றியாளர்களுக்கு வழங்கி எங்களையும் கெளரவித்த தமிழோவியத்தினருக்கு நாங்கள் நிச்சயம் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். தமிழோவியம் குழுவினருக்கு எங்களின் நன்றிகள். தமிழோவியத்தின் ‘கணேஷ் சந்திரா’ அவர்களுக்கு எங்களின் ‘ஸ்பெஷல்’ நன்றிகள்! மீண்டும் ஒரு வாய்ப்பிருந்தால் சேர்ந்து பணிபுரியும் விருப்பத்துடன், தமிழோவியத்திலிருந்து விடைபெறுகிறோம்! நன்றி நண்பர்களே!!

வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் இது வரை நடைபெற்ற போட்டிகளில் கிடைக்கப்பெற்ற வாய்ப்பினை சிறப்பாகப் பயன்படுத்தி, தமிழின் வளர்ச்சிக்கு தேன்கூடு-தமிழோவியம் நண்பர்களின் முயற்சிக்கு துணை நின்ற இனிய நண்பர்கள் எங்களின் அன்பு வலைப்பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் எங்களின் அன்புகலந்த நன்றிகள்.

போட்டிக்கான பரிசுகளை வழங்குவதனை மிகவும் சுலபமானதாகவும், இனிமையான அனுபவமாகவும் மாற்றிய தமிழ் இணைய புத்தக விற்பனை நிறுவனங்கள், தமிழோவியம்.காம், எனி இந்தியன்.காம், காமதேனு.காம், நிலாஷாப்.காம், விகடன் பிரசுரம் ஆகியவற்றிற்கு எங்களின் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தேன்கூடு-தமிழோவியம் போட்டிகள் இத்துடன் நிறைவு பெற்றன. இனி வரும் மாதங்களில் இன்னமும் பல சிறப்பான சுவையான வாய்ப்புகள் பதிவர்களுக்கு வர இருக்கிறது, அவற்றிலும் கலந்து கொண்டு, பதிவர்களை உற்சாகப்படுத்துமாறு வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் நட்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

முன்னரே அறிவித்தபடி இதுவரை நடைபெற்ற போட்டிகளைச் சிறப்பிக்கச் செய்த சில வலைஞர்களுக்கான அங்கீகாரப் பரிசுகளை வழங்க இருக்கிறோம். அது குறித்த அறிவிப்பு சில தினங்களில் வெளிவரலாம். வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவர் பெயரும் சில தினங்களில் வெளியிடப்படும்.

மற்றபடி,

தேன்கூட்டிற்கும், தமிழோவியத்திற்கும் போட்டிகள் குறித்த உங்களது கருத்துக்களை அனுப்பி வையுங்கள். உங்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களுக்காகவே காத்திருக்கிறோம்.

நன்றி, வணக்கம்.

நட்புடன்,
தேன்கூடு நண்பர்கள் குழுமம்.



வலைப்பதிவர்களின் மதிப்பீடுகள்:

100% 
1 கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை - அரைபிளேட 27%
2 குறும்பு - நாமக்கல் சிபி 24.3%
3 கப்பிப்பயல் - ஓகை 24.3%
4 ஹிந்தி ஒயிக.. எக்சாம் ஹால் அக்குறும்பு.. - araiblade 21.6%
5 நந்தன் - ராம் 21.6%
6 அக்குறும்பு ! - கோவி.கண்ணன் 18.9%
7 ஒரு காதல் பயணம் - 7 (தேன்கூடு போட்டிக்கும்) - அருட்பெருங்கோ 18.9%
8 குறும்பு-செந்தில் குமரன் 16.2%
9 மறுபக்கம் - பினாத்தல் சுரேஷ் 16.2%
10 காதல் வந்துடுச்சி … - கோவி.கண்ணன் 16.2%
11 வாலிபக்குறும்பு (தேன்கூடு போட்டிக்காக) - mdsultan 16.2%
12 குறும்பெல்லாம் குறும்பா? - sk 16.2%
13 குறும்பு செய்ய விரும்பு - சதீஷ் 16.2%
14 ஆக வேண்டுமா வலைப்பதிவர் Gameshow - பினாத்தல் சுரேஷ் 16.2%

 இந்த மாதம் நடந்த ஓட்டெடுப்பின் முழுமையான விபரங்களை காண: வலைப்பதிவர் மதிப்பீடுகள்

நடுவர் குழுவின் மதிப்பீடுகள்:

       
1 கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை - அரைபிளேட 92 35 80
2 குறும்பு - நாமக்கல் சிபி 77 55 62
3 கப்பிப்பயல் - ஓகை 77 50 45
4 ஹிந்தி ஒயிக.. எக்சாம் ஹால் அக்குறும்பு.. - araiblade 65 35 55
5 நந்தன் - ராம் 91 45 60
6 அக்குறும்பு ! - கோவி.கண்ணன் 65 40 53
7 ஒரு காதல் பயணம் - 7 (தேன்கூடு போட்டிக்கும்) - அருட்பெருங்கோ 82 40 57
8 குறும்பு-செந்தில் குமரன் 77 50 50
9 மறுபக்கம் - பினாத்தல் சுரேஷ் 88 40 55
10 காதல் வந்துடுச்சி … - கோவி.கண்ணன் 62 35 68
11 வாலிபக்குறும்பு (தேன்கூடு போட்டிக்காக) - mdsultan 67 40 40
12 குறும்பெல்லாம் குறும்பா? - sk 84 50 75
13 குறும்பு செய்ய விரும்பு - சதீஷ் 60 40 65
14 ஆக வேண்டுமா வலைப்பதிவர் Gameshow - பினாத்தல் சுரேஷ் 70 40 65

 

இறுதி முடிவுகள்:

100% 
1 கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை - அரைபிளேட 52.2%
2 குறும்பு - நாமக்கல் சிபி 48.52%
12 குறும்பெல்லாம் குறும்பா? - sk 48.28%
5 நந்தன் - ராம் 47.84%
3 கப்பிப்பயல் - ஓகை 44.12%
7 ஒரு காதல் பயணம் - 7 (தேன்கூடு போட்டிக்கும்) - அருட்பெருங்கோ 43.36%
9 மறுபக்கம் - பினாத்தல் சுரேஷ் 43.08%
8 குறும்பு-செந்தில் குமரன் 41.88%
14 ஆக வேண்டுமா வலைப்பதிவர் Gameshow - பினாத்தல் சுரேஷ் 41.48%
4 ஹிந்தி ஒயிக.. எக்சாம் ஹால் அக்குறும்பு.. - araiblade 39.64%
10 காதல் வந்துடுச்சி … - கோவி.கண்ணன் 39.48%
13 குறும்பு செய்ய விரும்பு - சதீஷ் 39.48%
6 அக்குறும்பு ! - கோவி.கண்ணன் 39.16%
11 வாலிபக்குறும்பு (தேன்கூடு போட்டிக்காக) - mdsultan 35.88%


Vaasagar voting was extreamly less in this time(13 votes)

12.07.06

திரட்டி’ஜி’ - பெயர் மாற்றம்

Posted in அறிவிப்புகள் at 11:16 am by Thenkoodu Support

கூகிள் என்ற பெயர் ஒரு வேளை கூகிள் தளத்திற்கான தொடுப்பு என்று பலருக்கு தோன்றும் காரணத்தினால் பார்க்கப்படுவதில்லை என்று அறிகிறோம்.

எனவே கூகிள் திரட்டியின் பக்கம் இனி ‘திரட்டிஜி’ என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

ஏன்? திரட்டிஜி! :-)
அனைத்து தமிழ்ப்பதிவுகளையும் உடனுக்குடன் திரட்டுவதில் கூகிள் முன்னிலையில் இருப்பதுவும் ஒரு காரணம்தான்! :-)

தேன்கூட்டினால் திரட்டப்படாத தளங்களிலிருந்தும் இந்த திரட்டிஜி திரட்டுவதை நீங்கள் காணலாம்.
திரட்டிகள் எதிலும் இணைக்கப்படாத தளங்களிலிருந்தும் திரட்டுவது ‘திரட்டிஜி’!
இன்னும் சொல்லப்போனால், பிறமொழி தளங்களில் கூட, பதிவு ‘தமிழில் எழுதப்பட்டிருந்தால்’ திரட்டுவது ‘திரட்டிஜி’!

திரட்டி’ஜி’ யை பயன்படுத்திப்பாருங்கள்… முற்றிலும் வித்தியாசமான அனுபவம் காத்திருக்கிறது! :-)

The Previous post on Google Portlet Could be found Here.

Please Note: We are not responsible for the posts being aggregated by Google.

12.05.06

பரிசுகள் வழங்குபவர்கள்: சென்னை நூலகம், நிலாஷாப்

Posted in அறிவிப்புகள் at 10:32 pm by Thenkoodu Support

டிசம்பர் மாதப் போட்டியில் இரண்டாவது பரிசாக ரூபாய் 700 மதிப்புள்ள ‘தமிழ் மின்னூல்கள்’ சி.டி.களை பரிசுப் பொருட்களாக வழங்குபவர்கள் - சென்னை நூலகம்.காம்

பரிசுச் சி.டி கள் குறித்த விபரங்களை இங்கு பார்க்கலாம். சென்னை நூலகத்தில் தற்பொழுது குழந்தைகளுக்கான தமிழ் சி.டி களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.


டிசம்பர் மாதப் போட்டியில் மூன்றாவது பரிசாக ரூபாய் 300 மதிப்புள்ள பரிசுப் பொருட்களை வழங்குபவர்கள் - நிலாஷாப்.காம்

நிலாஷாப்.காம் ஷாப்பிங் இணைய தளத்தில் உங்களுக்கு விருப்பமான பரிசுகளை இப்பொழுதே பார்த்து வையுங்கள்!


போட்டி குறித்த மேலதிக விபரங்களுக்கு: http://www.thenkoodu.com/contest.php

11.28.06

நவம்பர் ‘06 போட்டி முடிவுகள்

Posted in அறிவிப்புகள், போட்டி at 12:48 am by Thenkoodu Support

நவம்பர் 2006 வலைப்பதிவுப் போட்டி முடிவுகள்

நவம்பர் மாதத்தின் தேன்கூடு-தமிழோவியம் போட்டியின் வெற்றிக்கு துணை நின்ற வலைப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி.

போட்டியில் பங்கெடுத்துக்கொண்டு ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் எழுதிய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியில் வெற்றி பெற்ற வலைப்பதிவர்களுக்கு எங்களின் சிறப்புப் பாராட்டுகள்.

பின்னூட்டங்கள் மூலமாகவும், வாக்குப் பதிவில் கலந்து கொண்டு வாக்களித்தும் பதிவர்களை உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் எங்களின் நன்றிகள்.

போட்டி முடிவுகள்:

முதல் பரிசு -

Cyril சொர்க்கம் இலவசம்- சிறில் அலெக்ஸ்

இரண்டாவது பரிசு -

இலவசம்? - பினாத்தல் சுரேஷ்

மூன்றாவது பரிசு -
SGopalஇலவசமாய்! - நாமக்கல் சிபி

நான்காவது இடத்தில் -

ஒன்றா இரண்டா இலவசம்? - ஷைலஜா

தேன்கூடு-தமிழோவியம் மாதாந்திரப் போட்டிகள் வலைப்பதிவுகளின் சாத்தியக்கூறுகளையும், வலைப்பதிவர்களின் எல்லையற்ற திறமையையும் அவர்கள் பாணியிலேயே சுலபமாக சுவாரசியமாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு பயிற்சிக்களம் என்பது நீங்கள் அறிந்ததே. எழுத்துத்திறனையும் நல்ல எழுத்துக்களையும் உற்சாகப்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் வெற்றி தோல்வியை விட பங்கேற்பு என்பதே திறமையை நிரூபிக்கும் முயற்சி. அந்த விதத்தில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களையும் பாராட்டுவதில் மகிழ்கிறோம்.

போட்டியில் நடுவர்களாகச் செயல்பட இசைந்த லக்கிலுக், ஆசிப் மீரான், பத்மா அர்விந்த்ஆகியோருக்கு எங்களின் நன்றிகள். நடுவர்களின் கணிப்பு மற்றும் போட்டியின் முடிவுகள் குறித்த புள்ளி விபரங்கள் கீழே பெட்டிகளில் காணலாம். ( போட்டியில் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10 ஆக்கங்கள் மட்டுமே, வாக்கெடுப்பு விபரங்கள் தெரிவிக்கப்படாமல் நடுவர்களுக்கு அனுப்பப்பட்டது. )

‘இலவசம்’ - தலைப்பினைக் கொடுத்ததுடன் மட்டுமல்லாது , அன்புடன் எங்களுடன் ஒத்துழைத்ததற்கும், போட்டி முடிவில் நடுவர்குழுவில் பங்கேற்று மதிப்பிட்டமைக்கும், இந்தப் போட்டிகளின் தொடர்ச்சிக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தமைக்கும் திரு. லக்கிலுக் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் வாய்ப்பினை சிறப்பாகப் பயன்படுத்தி, தமிழின் வளர்ச்சிக்கு தேன்கூடு நண்பர்களின் முயற்சிக்கு துணை நின்ற இனிய நண்பர்கள் எங்களின் அன்பு வலைப்பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தி!

தேன்கூட்டின் ஓராண்டு நிறைவினைக் கொண்டாடும் விதமாக அடுத்த மாதப் போட்டி, டிசம்பர் போட்டியினை மெகா போட்டியாக நடத்த முடிவெடுத்திருக்கிறோம். போட்டியில் பங்கேற்பவர்களுக்கு (வோட்டு போடுபவர்கள் உட்பட) அதிரடி பரிசுகள் காத்திருக்கின்றன. அது மட்டுமல்லாது டிசம்பர் மாதப் போட்டியே தேன்கூடு தமிழோவியம் தொடர் போட்டிகளின் கடைசிப் போட்டி என்பதனையும் அறியத்தருகிறோம்.

போட்டியின் பரிசுத் தொகைகளிலும் மாற்றங்கள் உண்டு. விபரங்கள் டிசம்பர் 1 ல்.

தேன்கூடு-தமிழோவியம் டிசம்பர் மாதப் போட்டியிலும் வாக்கெடுப்பிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பதிவர்களை உற்சாகப்படுத்துமாறு வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் நட்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி, வணக்கம்.



வலைப்பதிவர்களின் மதிப்பீடுகள்:

100%  50%
1 என்னாது… இலவசம்.. இல்லையா? - வெட்டிப்பயல் 31.1% 15.55
2 இலவசமாய்! - நாமக்கல் சிபி 26.7% 13.35
3 சொர்க்கம் இலவசம் - சிறில் அலெக்ஸ் 26.7% 13.35
4 காதல் வாங்கினால் முத்தம் இலவசம்! - அருட்பெருங்கோ 24.4% 12.2
5 இரயில் வண்டியில் ஒரு ஹஜ் பயணம் (இலவசமாய்) - madhumitha 22.2% 11.1
6 இலவசம்? - பினாத்தல் சுரேஷ் 22.2% 11.1
7 ஒன்றா இரண்டா இலவசம்? - ஷைலஜா 20% 10
8 இனியெல்லாம் இலவசமே… - செந்தழல் ரவி 20% 10
9 இலவசம் மனக்கசப்பே! - sk 15.6% 7.8
10 ட்டுர்ர்ர்ர்ர்… - தியாகராஜன். ரெ 15.6% 7.8

வாசகர்களின் மதிப்பீடுகள்:

100%  20%
1 என்னாது… இலவசம்.. இல்லையா? - வெட்டிப்பயல் 3.2% 0.64
2 இலவசமாய்! - நாமக்கல் சிபி 6.5% 1.3
3 சொர்க்கம் இலவசம் - சிறில் அலெக்ஸ் 19.4% 3.88
4 காதல் வாங்கினால் முத்தம் இலவசம்! - அருட்பெருங்கோ 3.2% 0.64
5 இரயில் வண்டியில் ஒரு ஹஜ் பயணம் (இலவசமாய்) - madhumitha 12.9% 2.58
6 இலவசம்? - பினாத்தல் சுரேஷ் 3.2% 0.64
7 ஒன்றா இரண்டா இலவசம்? - ஷைலஜா 9.7% 1.94
8 இனியெல்லாம் இலவசமே… - செந்தழல் ரவி 12.9% 2.58
9 இலவசம் மனக்கசப்பே! - sk 3.2% 0.64
10 ட்டுர்ர்ர்ர்ர்… - தியாகராஜன். ரெ 6.5% 1.3

 இந்த மாதம் நடந்த ஓட்டெடுப்பின் முழுமையான விபரங்களை காண: வலைப்பதிவர் மதிப்பீடுகள், வாசகர் மதிப்பீடுகள்.

நடுவர் குழுவின் மதிப்பீடுகள்:

100%  10%     10%     10%
1 என்னாது… இலவசம்.. இல்லையா? - வெட்டிப்பயல் 60 6 75 7.5 20 2
2 இலவசமாய்! - நாமக்கல் சிபி 85 8.5 50 5 50 5
3 சொர்க்கம் இலவசம் - சிறில் அலெக்ஸ் 65 6.5 65 6.5 73 7.3
4 காதல் வாங்கினால் முத்தம் இலவசம்! - அருட்பெருங்கோ 80 8 50 5.0 5.5 5.5
5 இரயில் வண்டியில் ஒரு ஹஜ் பயணம் (இலவசமாய்) - madhumitha 70 7 60 6 40 4
6 இலவசம்? - பினாத்தல் சுரேஷ் 80 8 70 7 70 7
7 ஒன்றா இரண்டா இலவசம்? - ஷைலஜா 90 9 55 5.5 60 6
8 இனியெல்லாம் இலவசமே… - செந்தழல் ரவி 85 8.5 50 5 35 3.5
9 இலவசம் மனக்கசப்பே! - sk 50 5 50 5 15 1.5
10 ட்டுர்ர்ர்ர்ர்… - தியாகராஜன். ரெ 70 7 50 5.0 35 3.5

 

இறுதி முடிவுகள்:

3 சொர்க்கம் இலவசம் - சிறில் அலெக்ஸ் 37.53%
6 இலவசம்? - பெனாத்தல் சுரேஷ் 33.74%
2 இலவசமாய் - நாமக்கல் சிபி 33.15%
5 ஒன்றா இரண்டா இலவசம்? - ஷைலஜா 32.44%
1 என்னாது இலவசம் இல்லையா? - வெட்டிப்பயல் 31.69%
8 காதல் வாங்கினால் முத்தம் இலவசம் - அருட்பெருங்கோ 31.34%
4 இரயில் வண்டியில் ஒரு ஹஜ் பயணம் இலவசமாய் - மதுமிதா 30.68%
7 இனியெல்லாம் இலவசமே - செந்தழல் ரவி 29.58%
10 ட்டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் - தியாகராஜன் 24.6%
6 இலவசம் மனக்கசப்பே - எஸ்கே 19.74%


நடுவர் பத்மா அரவிந்த் அவர்களின் கருத்துக்கள்:

அவ்வளவு சிறப்பானதாக பெரும்பான்மையான ஆக்கங்கள் படவில்லை. மதுமிதாவின் ஆக்கம் ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் போக போக ஒரு பயணக்குறிப்பாக மாறிவிட்டது.

எஸ்கே, வெட்டிப்பயல் இருவரும் கட்டுரையாகவோ இல்லை கதை என்ற கோணமாக எழுதாதாவாறு தோன்றியது. இன்னும் அழுத்தமாக எழுதி இருக்கலாம்.வெட்டிப்பயல் இன்னும் கொஞ்சம் எழுத்துப்பிழைகளை கவனித்திருந்திருக்கலாம்.

நாமக்கல் சிபி, ஷைலஜா மற்றும் அருட்பெருங்கோ மூவருமே அருமையாக எழுதி இருந்தாலும் ஷைலஜாவின் கவிதையில் ஒருவித இனிமையும் இருந்ததாகப் பட்டது.

சுரேஷின் கதையும் சிறில் அலெக்ஸின் கதையும் நடையில் வடிவமைப்பில் அருமையாக இருந்த போதும், அலெக்ஸின் நடையும் நகைச்சுவையும் அழுத்தமான கதைக்கருவும் முதற்பரிசுக்கான தகுதி உடையது என்று கருதுகிறேன்.

நடுவர் குழுவில் பங்கேற்று ஆர்வமுடன் ஒத்துழைப்பு நல்கிய நண்பர் திரு. ஆசிப் மீரான், அவரது கருத்துக்களை தனிப்பதிவாக எழுத எண்ணம் கொண்டிருக்கிறார். அவருக்கு எங்களின் நன்றிகள்.
Update: http://asifmeeran.blogspot.com/2006/11/blog-post_28.html

10.31.06

அக்டோபர் ‘06 போட்டி முடிவுகள்

Posted in அறிவிப்புகள், போட்டி at 4:31 am by Thenkoodu Support

அக்டோபர் 2006 வலைப்பதிவுப் போட்டி முடிவுகள்

அக்டோபர் மாதத்தின் தேன்கூடு-தமிழோவியம் போட்டியின் வெற்றிக்கு துணை நின்ற வலைப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி.

போட்டியில் பங்கெடுத்துக்கொண்டு ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் எழுதிய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியில் வெற்றி பெற்ற வலைப்பதிவர்களுக்கு எங்களின் சிறப்புப் பாராட்டுகள்.

பின்னூட்டங்கள் மூலமாகவும், வாக்குப் பதிவில் கலந்து கொண்டு வாக்களித்தும் பதிவர்களை உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் எங்களின் நன்றிகள்.

போட்டி முடிவுகள்:

முதல் பரிசு -

Lucky அப்பாவி அடிமைகளுக்கு - luckylook

இரண்டாவது பரிசு -

GRagavan விடுதலை - gragavan

மூன்றாவது பரிசு -
SGopalவிட்டு விடுதலையாகி… - சுதர்சன்.கோபால்

நான்காவது இடத்தில் -

ஓர் இரவில்….தீபாவை மீட்க - kadalganesan

தேன்கூடு-தமிழோவியம் மாதாந்திரப் போட்டிகள் வலைப்பதிவுகளின் சாத்தியக்கூறுகளையும், வலைப்பதிவர்களின் எல்லையற்ற திறமையையும் அவர்கள் பாணியிலேயே சுலபமாக சுவாரசியமாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு பயிற்சிக்களம் என்பது நீங்கள் அறிந்ததே. எழுத்துத்திறனையும் நல்ல எழுத்துக்களையும் உற்சாகப்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் வெற்றி தோல்வியை விட பங்கேற்பு என்பதே திறமையை நிரூபிக்கும் முயற்சி. அந்த விதத்தில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களையும் பாராட்டுவதில் மகிழ்கிறோம்.

பிறந்த குழந்தை உடனடியாக எழுந்து ஓட முடியுமா? :-) மாதந்தோறும் ஏற்படும் அவசியமான மாறுதல்கள், தவிர்க்க இயலாதவை; ரசிக்கத்தக்கவை! ஒவ்வொரு மாதமும் போட்டியின் சரியான பாதைக்காக வாசகர்களும் வலைப்பதிவர்களும் தரும் ஆலோசனைகளுக்கு நிச்சயம் நாங்கள் நன்றி சொல்லத்தான் வேண்டும். போட்டியின் இந்த மாதத்திலும் ஒரு சிறப்பு மாறுதல் - வலைப்பதிவர் மற்றும் வாசகர் தேர்வுகள் பிரித்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, இந்த மாதப் போட்டியின் முடிவுகள் வலைப்பதிவர் வாக்கெடுப்பு(50%) , வாசகர் வாக்கெடுப்பு(20%), நடுவர் குழுவின் கருத்து(30%) ஆகியவற்றின் துணையுடன் முடிவு செய்யப் பட்டிருக்கிறது.

போட்டியில் நடுவர்களாகச் செயல்பட இசைந்த ஆசாத், அருணா சீனிவாசன், பவித்ரா சீனிவாசன் ஆகியோருக்கு எங்களின் நன்றிகள். நடுவர்களின் கணிப்பு மற்றும் போட்டியின் முடிவுகள் குறித்த புள்ளி விபரங்கள் கீழே பெட்டிகளில் காணலாம். ( போட்டியில் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10 ஆக்கங்கள் மட்டுமே, பெயர்,வாக்கெடுப்பு விபரங்கள் தெரிவிக்கப்படாமல் நடுவர்களுக்கு அனுப்பப்பட்டது. பதிவர்கள் பங்களிப்பு, நடுவர்கள் நேரம் பொறுத்து, அடுத்தடுத்த மாதங்களில் இந்த எண்ணிக்கை உயர்த்தப்படலாம்.)

‘விடுதலை’ - தலைப்பினைக் கொடுத்ததுடன் மட்டுமல்லாது , அன்புடன் எங்களுடன் ஒத்துழைத்ததற்கும், போட்டி முடிவில் நடுவர்குழுவில் பங்கேற்று மதிப்பிட்டமைக்கும், இந்தப் போட்டிகளின் தொடர்ச்சிக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தமைக்கும் திரு. ஆசாத் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். விடுமுறை காலத்தில் தொடர்பு கொள்ள நேர்ந்த தொந்தரவினைக் கூடப் பெரிதுபடுத்தாமல், போட்டிக்காக நேரம் ஒதுக்கி ஒத்துழைப்பு நல்கிய திரு.ஆசாத், எங்கள் நினைவில் என்றும் இருப்பார்; நன்றி ஆசாத்!

தேன்கூடு - தமிழோவியம் வலைப்பதிவுப் போட்டிகளின் அடுத்தடுத்த மாதங்களின் போட்டிகளிலும் வாக்கெடுப்புகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பதிவர்களை உற்சாகப்படுத்துமாறு வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி, வணக்கம்.



வலைப்பதிவர்களின் மதிப்பீடுகள்:

100%  50%
1 தேன்கூடு போட்டி: விடுதலை - சிறுகதை - gragavan 37.5% 18.75
2 அப்பாவி அடிமைகளுக்கு - luckylook 34.4% 17.2
3 ஓர் இரவில்….தீபாவை மீட்க (தேன்கூடு போட்டிக்காக) - kadalganesan 28.1% 14.05
4 விட்டு விடுதலையாகி… - தேன்கூடு போட்டிக்கு - சுதர்சன்.கோபால் 28.1% 14.05
5 விடுதலை - சிறில் அலெக்ஸ் 25% 12.5
6 உள்ளாட்சித் தேர்தல் 2006 - கார்ட்டூன் - சோம்பேறி பையன் 25% 12.5
7 நில், கவனி, யோசி.. - சிறுகதை - சோம்பேறி பையன் 25% 12.5
8 நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!( தேன்கூடு போட்டிக்கு) - ஷைலஜா 25% 12.5
9 வேலிகளால் கிடைக்குமா விடுதலை? - ராசுக்குட்டி 25% 12.5
10 சூக்கும வழி - ஓகை 18.8% 9.4

வாசகர்களின் மதிப்பீடுகள்:

100%  20%
1 தேன்கூடு போட்டி: விடுதலை - சிறுகதை - gragavan 8.3% 1.66
2 அப்பாவி அடிமைகளுக்கு - luckylook 20.8% 4.16
3 ஓர் இரவில்….தீபாவை மீட்க (தேன்கூடு போட்டிக்காக) - kadalganesan 12.5% 2.5
4 விட்டு விடுதலையாகி… - தேன்கூடு போட்டிக்கு - சுதர்சன்.கோபால் 16.7% 3.34
5 விடுதலை - சிறில் அலெக்ஸ் 8.3% 1.66
6 உள்ளாட்சித் தேர்தல் 2006 - கார்ட்டூன் - சோம்பேறி பையன் 8.3% 1.66
7 நில், கவனி, யோசி.. - சிறுகதை - சோம்பேறி பையன் 8.3% 1.66
8 நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!( தேன்கூடு போட்டிக்கு) - ஷைலஜா 8.3% 1.66
9 வேலிகளால் கிடைக்குமா விடுதலை? - ராசுக்குட்டி 12.5% 2.5
10 சூக்கும வழி - ஓகை 4.2% 0.84

 இந்த மாதம் நடந்த ஓட்டெடுப்பின் முழுமையான விபரங்களை காண: வலைப்பதிவர் மதிப்பீடுகள், வாசகர் மதிப்பீடுகள்.

நடுவர் குழுவின் மதிப்பீடுகள்:

100%  10%     10%     10%
1 தேன்கூடு போட்டி: விடுதலை - சிறுகதை - gragavan 75 7.5 70 7 38 3.8
2 அப்பாவி அடிமைகளுக்கு - luckylook 81 8.1 84 8.4 40 4
3 ஓர் இரவில்….தீபாவை மீட்க (தேன்கூடு போட்டிக்காக) - kadalganesan 71 7.1 85 8.5 41 4.1
4 விட்டு விடுதலையாகி… - தேன்கூடு போட்டிக்கு - சுதர்சன்.கோபால் 85 8.5 80 8.0 45 4.5
5 விடுதலை - சிறில் அலெக்ஸ் 61 6.1 72 7.2 35 3.5
6 உள்ளாட்சித் தேர்தல் 2006 - கார்ட்டூன் - சோம்பேறி பையன் 65 6.5 95 9.5 45 4.5
7 நில், கவனி, யோசி.. - சிறுகதை - சோம்பேறி பையன் 70 7 78 7.8 25 2.5
8 நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!( தேன்கூடு போட்டிக்கு) - ஷைலஜா 80 8 75 7.5 40 4
9 வேலிகளால் கிடைக்குமா விடுதலை? - ராசுக்குட்டி 66 6.6 88 8.8 35 3.5
10 சூக்கும வழி - ஓகை 86 8.6 90 9.0 48 4.8

 

இறுதி முடிவுகள்:

2 அப்பாவி அடிமைகளுக்கு - luckylook 41.86%
1 தேன்கூடு போட்டி: விடுதலை - சிறுகதை - gragavan 38.71%
4 விட்டு விடுதலையாகி… - தேன்கூடு போட்டிக்கு - சுதர்சன்.கோபால் 37.54%
3 ஓர் இரவில்….தீபாவை மீட்க (தேன்கூடு போட்டிக்காக) - kadalganesan 36.25%
6 உள்ளாட்சித் தேர்தல் 2006 - கார்ட்டூன் - சோம்பேறி பையன் 34.66%
9 வேலிகளால் கிடைக்குமா விடுதலை? - ராசுக்குட்டி 33.9%
8 நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!( தேன்கூடு போட்டிக்கு) - ஷைலஜா 33.66%
10 சூக்கும வழி - ஓகை 32.64%
7 நில், கவனி, யோசி.. - சிறுகதை - சோம்பேறி பையன் 31.46%
5 விடுதலை - சிறில் அலெக்ஸ் 30.96%

« Previous entries ·