05.26.06

ஏப்ரல்-மே ‘06 மாதப் போட்டியின் முடிவுகள்

Posted in அறிவிப்புகள் at 4:22 am by Thenkoodu Support

தேன்கூடு - தமிழ் வலைப்பதிவுகளின் இணையம் மற்றும் தமிழோவியம் - இணைய வார இதழ் இணைந்து நடத்திய ஏப்ரல் - மே மாதப் போட்டி சிறப்பான முறையில் முடிவுற்றது.

இந்த போட்டியில் பங்கெடுத்துக்கொண்டு ஆர்வமுடன் எழுதிய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எங்களின் வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியில் வெற்றி பெற்ற வலைப்பதிவர்களுக்கு எங்களின் சிறப்புப் பாராட்டுகள்.

வாக்குப் பதிவில் கலந்து கொண்டு வாக்களித்து பதிவர்களை உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கு எங்களின் நன்றிகள்.

போட்டி முடிவுகள்:

முதல் பரிசு -

Sureshதேர்தல் 2060 - சிறுகதை - சுரேஷ் (பினாத்தல்)

இரண்டாவது பரிசு -

Cyril Alexதேர்தல் 2060 - சிறில் அலெக்ஸ்

மூன்றாவது பரிசு -

Kunthavai Vanthiyathevanதேர்தல் - 2060 கணிணிக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் - குந்தவை வந்தியத்தேவன

நான்காவது இடத்தில்-

தேர்தல் 2060 - நடராஜன் ஸ்ரீனிவாசன்

தேர்தல் - 2060 - ஒரு கற்பனை - balamukundhan

போட்டியின் முழுமையான வாக்குப் பதிவு விபரங்களை அறிய இங்கு சுட்டுங்கள்.

தொடர்ந்து வரும் போட்டிகளிலும் வாக்கெடுப்புகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பதிவர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

9 Comments »

  1. Suresh - Penathal said,

    May 26, 2006 at 10:22 am

    என் மனப்பூர்வமான நன்றிகள்.

  2. Balamukundhan said,

    May 26, 2006 at 11:57 am

    என் கற்பனைக் கதை (தேர்தல் - 2060 - ஒரு கற்பனை - balamukundhan) நான்காம் இடத்தில் joint winner ஆக தெரிவு செய்யப்பட்டமைக்கு, தேன்கூடு இணையத் தளத்திற்கும், வாக்கு போட்ட, மறுமொழி இட்ட, என் தளத்திற்கு வந்து உங்களின் பொன்னான சில நிமிடங்களை இந்த பதிவை படித்ததற்காகவும் செலவழித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.

    நான் பதிவுகள் எழுத ஆரம்பித்து 3 மாதங்களுக்குள், எனக்கு கிடைத்த recognitions இரண்டு. என் முதல் பதிவே தினமலரில் “dot.com” பகுதியில் குறிப்பிடப்பட்டது.

    கதை எழுதும் முயற்சியில் “தேர்தல் - 2060 - ஒரு கற்பனை ” என் கன்னி முயற்சி. வலைப் பதிவில் முதிர்ந்தவர்களின் மத்தியில் எனது கற்பனைக்கும் ஒரு அங்கீகாரம் கிடத்தது பற்றி எனக்கு மிகவும் சந்தோஷம். இனி மீண்டும் மீண்டும் வருவேன்.

    பாலமுகுந்தன்…………..

  3. Seenu said,

    May 26, 2006 at 2:08 pm

    தேர்தல் 2060 ஐப்பற்றி ஒன்றுமே எழுதவில்லை என்றாலும் வெற்றி பெறலாம் என்பது இந்த போட்டி முடிவிலிருந்த நான் அறிந்து கொண்டது.

  4. bravo said,

    May 26, 2006 at 5:54 pm

    தேர்தல் 2006 ரிசல்ட் மாதிரியே இருக்கு போங்க..

  5. Ramachandranusha said,

    May 26, 2006 at 7:00 pm

    வெற்றி பெற்ற சுரேஷ், சிரில் அலெக்ஸ், குந்தவை வந்தயதேவன், நடராஜன் ஸ்ரீனிவாசன், பால முகுந்தன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  6. natarajan srinivasan said,

    May 26, 2006 at 9:45 pm

    தேன்கூட்டிற்கு என் மனமார்ந்த நன்றிகள்

    நடராஜன்.

  7. Chameleon - பச்சோந்தி said,

    May 26, 2006 at 11:34 pm

    வெற்றிபெற்றவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.
    இது போல வலைப்பதிவரை ஊக்குவிக்கும்
    தேன்கூட்டிற்கு என் வாழ்த்துக்கள்.

  8. Dubukku said,

    May 30, 2006 at 4:48 pm

    வெற்றிபெற்றவர்களுக்கும் தேன்கூட்டிற்கும் பாராட்டுக்கள்

  9. குசும்பன் said,

    May 31, 2006 at 5:29 am

    நன்றி தேன்கூடு !!!

    வாழ்த்துக்கள் வெற்றி பெற்ற மக்கள்ஸே !!!

Leave a Comment