06.26.06
ஜூன் ‘06 மாதப் போட்டியின் முடிவுகள்
ஜூன் ‘06 மாதப் போட்டியின் முடிவுகள்
தேன்கூடு - தமிழ் வலைப்பதிவுகளின் இணையம் மற்றும் தமிழோவியம் - இணைய வார இதழ் இணைந்து நடத்திய ஜூன் மாதப் போட்டி மிகச் சிறப்பான முறையில் முடிவுற்றது.
எங்களின் எதிர்பார்ப்பிற்கும் மேலாக இந்தப் போட்டியில் பங்கெடுத்துக்கொண்டு ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் எழுதிய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எங்களின் வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியில் வெற்றி பெற்ற வலைப்பதிவர்களுக்கு எங்களின் சிறப்புப் பாராட்டுகள்.
பின்னூட்டங்கள் மூலமாகவும், வாக்குப் பதிவில் கலந்து கொண்டு வாக்களித்தும் பதிவர்களை உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் எங்களின் நன்றிகள்.
முதல் பரிசு -
விட்டில் பூச்சிகள் - Ilavanji
இரண்டாவது பரிசு -
..25, ..50, ..75, ..00, ..25 - ramachandranusha
மூன்றாவது பரிசு -
மனமுதிர் காலம் - நிலா
நான்காவது இடத்தில் -
மாறித்தான் ஆகனுமா? - கொங்கு ராசா
இந்த மாதம் நடந்த ஓட்டெடுப்பை இங்கே சென்று காணலாம்.
எழுத்துத்திறனையும் நல்ல எழுத்துக்களையும் உற்சாகப்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் வெற்றி தோல்வியை விட பங்கேற்பு என்பதே திறமையை நிரூபிக்கும் முயற்சி. அந்த விதத்தில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களையும் பாராட்டுவதில் மகிழ்கிறோம்.
சூடு பறக்கச் செய்த சிறப்பான ஒரு தலைப்பினைக் கொடுத்ததுடன் மட்டுமல்லாது , அன்புடன் எங்களுடன் ஒத்துழைத்ததற்கும், பதிவுகளில் தலைப்பு குறித்து நேர் செய்த விதத்திற்கும், போட்டி முடிவில் தந்த முழுமையான அறிமுகங்கள் இடுகைக்கும், இந்தப் போட்டிகளின் தொடர்ச்சிக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தமைக்கும் திரு. சுரேஷ் (பெனாத்தல்) அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
தேன்கூடு - தமிழோவியம் வலைப்பதிவுப் போட்டிகளின் அடுத்தடுத்த மாதங்களின் போட்டிகளிலும் வாக்கெடுப்புகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பதிவர்களை உற்சாகப்படுத்துமாறு வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி, வணக்கம்.

muthu(tamizhini) said,
June 26, 2006 at 9:20 am
வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
tamilatamila said,
June 26, 2006 at 9:36 am
வெற்றி பெற்ற வலைப்பதிவர்களுக்கு பாராட்டுகள்.
பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
சுரேஷ் பினாத்தல் said,
June 26, 2006 at 9:59 am
நல்ல போட்டியாக இருந்தது, நல்ல முடிவுகளும்.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள், தேன்கூடு தமிழோவியத்தின் இப்படிப்பட்ட ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு நன்றிகள்.
dharumi said,
June 26, 2006 at 2:01 pm
எல்லா படைப்பாளிகளுக்கும், சிறப்பாக வெற்றி பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
குப்புசாமி செல்லமுத்து said,
June 26, 2006 at 2:06 pm
வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.
Dubukku said,
June 26, 2006 at 3:43 pm
தேன்கூட்டிற்கும், பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும், பரிசு பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!!
SK said,
June 26, 2006 at 5:00 pm
நன்றிகள் பதினொன்று, என்னத் தவிர்த்து!
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
திறம்பட் போட்டியினை நடத்திய தேன்கூட்டிற்கும் நன்றி.