07.28.06

ஜூலை ‘06 மாதப் போட்டியின் முடிவுகள்

Posted in அறிவிப்புகள் at 5:47 am by Thenkoodu Support

ஜூலை ‘06 மாதப் போட்டியின் முடிவுகள்

தேன்கூடு - தமிழ் வலைப்பதிவுகளின் இணையம் மற்றும் தமிழோவியம் - இணைய வார இதழ் இணைந்து நடத்திய ஜூலை மாதப் போட்டி மிகச் சிறப்பான முறையில் முடிவுற்றது.

வலைப்பதிவுகளில் எழுத்தார்வம் எந்த அளவிற்கு இருக்க முடியும் என்பதில் எங்களுக்கு இருந்த நம்பிக்கையை அழுத்தமாக மெய்ப்பிக்கும் வண்ணம், எங்களின் எதிர்பார்ப்பிற்கும் மேலாக இந்தப் போட்டியில் பங்கெடுத்துக்கொண்டு ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் எழுதிய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியில் வெற்றி பெற்ற வலைப்பதிவர்களுக்கு எங்களின் சிறப்புப் பாராட்டுகள்.

பின்னூட்டங்கள் மூலமாகவும், வாக்குப் பதிவில் கலந்து கொண்டு வாக்களித்தும் பதிவர்களை உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் எங்களின் நன்றிகள்.

போட்டி முடிவுகள்:

முதல் பரிசு -

Nila ஜனனம் - நிலா

இரண்டாவது பரிசு -

Living Smile Vidya மரணம் - லிவிங் ஸ்மைல்

மூன்றாவது பரிசு -

Pons சந்திரா அத்தை - பொன்ஸ்

நான்காவது இடத்தில் -

காலதேவனை வேண்டியபடி - இளா

இந்த மாதம் நடந்த ஓட்டெடுப்பை இங்கே சென்று காணலாம்.

எழுத்துத்திறனையும் நல்ல எழுத்துக்களையும் உற்சாகப்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் வெற்றி தோல்வியை விட பங்கேற்பு என்பதே திறமையை நிரூபிக்கும் முயற்சி. அந்த விதத்தில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களையும் பாராட்டுவதில் மகிழ்கிறோம்.

வலைப்பதிவுகளின் சாத்தியக்கூறுகளையும், வலைப்பதிவர்களின் எல்லையற்ற திறமையையும் அவர்கள் பாணியிலேயே சுலபமாக சுவாரசியமாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு பயிற்சிக்களமாகவே இந்த போட்டிகளை நாங்கள் பார்க்கிறோம். இதில் வெற்றி, ஒரு உற்சாக உந்துதல். ஆனால் முடிவுகள் முழுமையானதல்ல என்பதனை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

இருப்பினும், இந்த போட்டிகள் குறித்த ஆக்கபூர்வமான மாற்று கருத்துக்களும், நல்ல பல ஆலோசனைகளும் எங்களுக்கு பல வாசகர்களிடமிருந்தும் கிடைத்துள்ளன. அவற்றில் சில ஆலோசனைகளை அடுத்து வரும் மாதங்களில் செயல்படுத்திப் பார்க்க விரும்புகிறோம். உங்களது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தவறாமல் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

‘மரணம்’ - வலைப்பதிவர்களின் உற்சாகமான பங்கேற்பிற்கும், பல புதிய தமிழ்ப்பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கும், இந்த தலைப்பு தான் காரணம் என்று சொன்னால் நிச்சயம் மிகையாகாது! தலைப்பினைக் கொடுத்ததுடன் மட்டுமல்லாது , அன்புடன் எங்களுடன் ஒத்துழைத்ததற்கும், போட்டி முடிவில் தந்த முழுமையான அறிமுகங்கள் இடுகைக்கும், இந்தப் போட்டிகளின் தொடர்ச்சிக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தமைக்கும் திரு. இளவஞ்சி அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

தேன்கூடு - தமிழோவியம் வலைப்பதிவுப் போட்டிகளின் அடுத்தடுத்த மாதங்களின் போட்டிகளிலும் வாக்கெடுப்புகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பதிவர்களை உற்சாகப்படுத்துமாறு வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி, வணக்கம்.

07.26.06

Unicode interface for Cologne lexicon - By Dr.S.Anbumani

Posted in அறிவிப்புகள் at 2:21 am by Thenkoodu Support

தமிழ்-ஆங்கில அகராதிக்கான தேடல் கருவிகளில் மிகவும் பிரபலமானதும் பலராலும் உபயோகப்படுத்தப்படுவதும் ‘Online Tamil Lexicon’ - திஸ்கி(Tscii) இடைமுகம் என்பது அனைவரும் அறிந்ததே.

இப்பொழுது இந்த அகராதியின் யூனிகோடு இடைமுகமும் டாக்டர். S. அன்புமணி அவர்களால் தமிழ்க் கணிமைப் பயனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த இடைமுகத்தின் நேரடிச் சுட்டி: http://www.ee.vt.edu/~anbumani/tamildict/unitamildict.php

வலைப்பதிவர்களும் வாசகர்களுக்கும் இந்த இடைமுகம் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

தேன்கூடு குழுமத்தினரின் வேண்டுகோளை தூண்டுகோலாக ஏற்று…

பலராலும் உபயோகப்படுத்தப்படும் தமிழ் லெக்சிகன் அகராதிக்கான யூனிகோடு இடைமுகத்தினை ஏற்படுத்தித் தந்த திரு. டாக்டர். S. அன்புமணி அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

டாக்டர். திரு.அன்புமணி அவர்கள் தமிழ் கணிப்பயன்பாட்டியலில் பெரும் ஈடுபாடுடையவர். ‘தமிழ் லினக்ஸ்‘ முயற்சிகளில் ஈடுபட்டவர். ‘கொலோன் தமிழ் லெக்சிகன்’ அகராதிக்கான தமிழ் இடைமுகத்தினை 2001 ம் ஆண்டிலேயே உருவாக்கியவர். பிராஜக்ட் மதுரை திட்டத்தில் இன்றும் முக்கியப் பங்காற்றி வருபவர். மேலதிக விபரங்கள் இங்கு. தொடர்பிற்கு: anbumani (at) vt.edu

07.22.06

SPAM Mails through Thenkoodu

Posted in அறிவிப்புகள், மேம்பாடு at 9:34 pm by Thenkoodu Support

We came to know some of the recently registered users(rather spammers) , have been found to be sending SPAM emails through our contact author feature. Thenkoodu has a strict policy against SPAM. Those id’s have been removed from the system, and few more precautions were taken care to avoid such activities.

- Team.

07.21.06

வாக்கெடுப்பு ஆரம்பம்!

Posted in அறிவிப்புகள் at 5:13 am by Thenkoodu Support

தேன்கூடு - தமிழோவியம் ஜூலை மாதப் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டிருக்கும் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும். அவர்களை உற்சாகப்படுத்தி பின்னூட்டங்களில் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட வாசகர்களுக்கும் எங்களின் நன்றி.

வலைப்பதிவர்களின் ஆரவாரமான ஆதரவு மற்றும் பங்கேற்புடன் இந்த மாதப்போட்டி மிகச் சிறப்பான முறையில் நடந்து வருகிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும், வாக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது. உங்களுக்கு பிடித்த ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட உங்கள் வலை நண்பர்களை உற்சாகப்படுத்துமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வாசகர்கள் பலரின் விருப்பத்திற்கிணங்க இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பிற்கான இறுதி தேதி 27ம் தேதியாக நீட்டிக்கப்படுகிறது. முடிவுகள் 28ம் தேதி அறிவிக்கப்படும்.

07.18.06

Bloggers Blockage - A Quick Solution

Posted in அறிவிப்புகள் at 3:59 am by Thenkoodu Support

We have been receiving few complaints from our readers that they are not able to see the blog post contents.

This is the hot issue being discussed right now, in Indian blogsphere. More details can be found here. And we believe it’s a mistake of implementing wrong orders and it’ll be reverted back soon. To raise/discuss your voice, please be in touch with BloggersCollective Group.


For our readers, we are happy to inform that you are already having a tool for viewing blog posts via Thenkoodu.com - Tamil Blogs Portal.

This feature is basically developed for helping those readers who were in need of dynamic fonts to view the blog posts. This could as well be used at this scenario to read the blog posts.

How to use this tool? It’s really Easy.

Next to each blog post in Thenkoodu Blog Aggregator page, you could see a small icon as “A+” (Dynamic Font Page) . Click on this icon, vio! you are there in the bloggers page!

We believe this utility will be handy for you in continuing your reading pleasure.

Please Note: The blog post has been retrieved for inserting dynamic font purpose only. Thenkoodu is neither affiliated with the authors of that page nor responsible for its content.

****

தானியங்கி எழுத்துருவினை இணைத்து, இடுகைகளைக் காண்பதற்கான பக்கம் மூலமாக, தடை செய்யப்பட்ட தளத்திலுள்ள இடுகையைக் காண இயலும். இது குறித்த விபரங்கள் மேலே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

07.15.06

DownTime Scheduled

Posted in அறிவிப்புகள் at 7:42 pm by Thenkoodu Support

Tonight(15/07/2006) between IST 12:00AM - 4AM, Thenkoodu.com site might be down.
There might be slight misbehaviour/order differences on the blog posts.

The task was completed successfully. Thanks for your co-operation.

- Thenkoodu Team.

07.01.06

We are back! :-)

Posted in அறிவிப்புகள் at 8:57 am by Thenkoodu Support

The issues were all resolved.. and now we are back! Thanks for your patience.

Our team is currently working on some fine(rather finest?! :-)) tunings of the system to provide a non-stop service to tamil blogs community!