07.28.06

ஜூலை ‘06 மாதப் போட்டியின் முடிவுகள்

Posted in அறிவிப்புகள் at 5:47 am by Thenkoodu Support

ஜூலை ‘06 மாதப் போட்டியின் முடிவுகள்

தேன்கூடு - தமிழ் வலைப்பதிவுகளின் இணையம் மற்றும் தமிழோவியம் - இணைய வார இதழ் இணைந்து நடத்திய ஜூலை மாதப் போட்டி மிகச் சிறப்பான முறையில் முடிவுற்றது.

வலைப்பதிவுகளில் எழுத்தார்வம் எந்த அளவிற்கு இருக்க முடியும் என்பதில் எங்களுக்கு இருந்த நம்பிக்கையை அழுத்தமாக மெய்ப்பிக்கும் வண்ணம், எங்களின் எதிர்பார்ப்பிற்கும் மேலாக இந்தப் போட்டியில் பங்கெடுத்துக்கொண்டு ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் எழுதிய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியில் வெற்றி பெற்ற வலைப்பதிவர்களுக்கு எங்களின் சிறப்புப் பாராட்டுகள்.

பின்னூட்டங்கள் மூலமாகவும், வாக்குப் பதிவில் கலந்து கொண்டு வாக்களித்தும் பதிவர்களை உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் எங்களின் நன்றிகள்.

போட்டி முடிவுகள்:

முதல் பரிசு -

Nila ஜனனம் - நிலா

இரண்டாவது பரிசு -

Living Smile Vidya மரணம் - லிவிங் ஸ்மைல்

மூன்றாவது பரிசு -

Pons சந்திரா அத்தை - பொன்ஸ்

நான்காவது இடத்தில் -

காலதேவனை வேண்டியபடி - இளா

இந்த மாதம் நடந்த ஓட்டெடுப்பை இங்கே சென்று காணலாம்.

எழுத்துத்திறனையும் நல்ல எழுத்துக்களையும் உற்சாகப்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் வெற்றி தோல்வியை விட பங்கேற்பு என்பதே திறமையை நிரூபிக்கும் முயற்சி. அந்த விதத்தில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களையும் பாராட்டுவதில் மகிழ்கிறோம்.

வலைப்பதிவுகளின் சாத்தியக்கூறுகளையும், வலைப்பதிவர்களின் எல்லையற்ற திறமையையும் அவர்கள் பாணியிலேயே சுலபமாக சுவாரசியமாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு பயிற்சிக்களமாகவே இந்த போட்டிகளை நாங்கள் பார்க்கிறோம். இதில் வெற்றி, ஒரு உற்சாக உந்துதல். ஆனால் முடிவுகள் முழுமையானதல்ல என்பதனை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

இருப்பினும், இந்த போட்டிகள் குறித்த ஆக்கபூர்வமான மாற்று கருத்துக்களும், நல்ல பல ஆலோசனைகளும் எங்களுக்கு பல வாசகர்களிடமிருந்தும் கிடைத்துள்ளன. அவற்றில் சில ஆலோசனைகளை அடுத்து வரும் மாதங்களில் செயல்படுத்திப் பார்க்க விரும்புகிறோம். உங்களது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தவறாமல் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

‘மரணம்’ - வலைப்பதிவர்களின் உற்சாகமான பங்கேற்பிற்கும், பல புதிய தமிழ்ப்பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கும், இந்த தலைப்பு தான் காரணம் என்று சொன்னால் நிச்சயம் மிகையாகாது! தலைப்பினைக் கொடுத்ததுடன் மட்டுமல்லாது , அன்புடன் எங்களுடன் ஒத்துழைத்ததற்கும், போட்டி முடிவில் தந்த முழுமையான அறிமுகங்கள் இடுகைக்கும், இந்தப் போட்டிகளின் தொடர்ச்சிக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தமைக்கும் திரு. இளவஞ்சி அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

தேன்கூடு - தமிழோவியம் வலைப்பதிவுப் போட்டிகளின் அடுத்தடுத்த மாதங்களின் போட்டிகளிலும் வாக்கெடுப்புகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பதிவர்களை உற்சாகப்படுத்துமாறு வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி, வணக்கம்.

13 Comments »

  1. muthu(tamizhini) said,

    July 28, 2006 at 10:01 am

    பரிசு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். களம் அமைத்து கொடுத்த தேன்கூட்டிற்கும் நன்றி.

  2. tamilmagan said,

    July 28, 2006 at 10:54 am

    பரிசு பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

  3. madhumitha said,

    July 28, 2006 at 11:06 am

    தேன்கூடு, தமிழோவியம், தலைப்பும் அளித்து, அருமையான திறனாய்வு செய்த இளவஞ்சி, போட்டியில் கலந்துகொண்டோர், மற்றும் வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி

  4. யாத்திரீகன் said,

    July 28, 2006 at 12:01 pm

    வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

    போட்டியின் படைப்புகளில் இருக்கும் எழுத்துப்பிழைகளுக்கு -வ் % இறுதியில் கொடுக்க வேண்டும்…. ஏகப்பட்ட படைப்புகளில் தமிழ் ததிங்கிணத்தோம் ஆடுகின்றது :-(
    இது தேன்கூட்டிற்கான எனது வேண்டுகோள்…

  5. யெஸ்.பாலபாரதி said,

    July 28, 2006 at 12:20 pm

    உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
    பரிசு பெற்ற எல்லோரும் பெண்கள் என்பது தான் மகிழ்ச்சிக்கு காரணம்.
    தந்தை பெரியாரின் கருத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நனவகிவிடும் என்ற ஆசையை துளிர் விடச்செய்யும் முடிவுகள்.
    *
    படைப்பாள்ளிகளுக்கும் , போட்டியை நடத்தியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    வோட்டுப் போட்ட எல்லோருக்கும் நன்றிகள்.

  6. ramachandranusha said,

    July 28, 2006 at 12:38 pm

    நிலா, வித்யா, பொன்ஸ், இளா மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இம்முறை படைப்புகள் அதிகமாகிப்போனதால் கடைசி சில நாட்களில் வந்தவைகளை படிக்க முடியவில்லை, ஓட்டுப் போட்ட அனைவருமே, அனைத்து படைப்புகளையும் படித்து ஓட்டுப் போட்டார்களா என்பது சந்தேகமே.. முதல் பரிசாய், அடுத்த போட்டிக்கான தலைப்பை தேர்ந்தெடுத்துவிட்டு, போட்டிக்கான ஆக்கங்களையும் படித்து பரிசுக்குரியவைகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் தரலாமே?

    இது பரிசா தண்டனையா என்று கேள்வியை யாரும் கேட்டுவிடாதீர்கள் :-)

  7. Oagai said,

    July 28, 2006 at 2:37 pm

    நிலா, லிவிங் ஸ்மைல் வித்யா, பொன்ஸ் மற்றும் இளா ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

    என் படைப்பிற்கு வாக்களித்த அந்த பதினைந்து பேர்களுக்கும் என் சிறப்பு நன்றிகள் உரித்தாகுக!

    தேன்கூட்டிற்கு நன்றி.

  8. revathi narasimhan said,

    July 28, 2006 at 2:45 pm

    வெற்றீ பெற்ற அனைவரும் நல்ல எழுத்தாளர்கள். நல்ல எழுத்துக்களுக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது.
    நிலா,பொன்ஸ், வித்யா, இளா வாழ்த்துகள்.
    இன்னும் நிறைய எழுதி எங்களை மகிழ்விக்கணும்.
    எனக்கும் எழுத வாய்ப்பு கொடுத்த தேன்கூட்டிற்கும் தமிழோவியத்திற்கும் நன்றி.
    மனு,வல்லி

  9. G Gowtham said,

    July 28, 2006 at 7:22 pm

    நிலா, லிவிங் ஸ்மைல் வித்யா, இளா…
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    தேன்கூட்டுக்கும் தமிழ்மணத்துக்கும் பாராட்டுக்கள்.
    வாக்களித்த அனைவருக்கும் கை குலுக்கல்கள்.
    சரியானது வென்றே தீரும், வெற்றியாளர்கள் வாழ்க:வளர்க!
    அழியா அன்புடன்..
    ஜி கௌதம்

  10. G Gowtham said,

    July 28, 2006 at 7:32 pm

    அச்சச்சோ! அவசரத்தில் பொன்ஸ் பேர விட்டுட்டேன்!
    அதனேலென்ன… பொன்ஸுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்…
    அழியா அன்புடன்
    ஜி கௌதம்

  11. ஜெயபால் said,

    July 28, 2006 at 11:52 pm

    வென்றவர்களுக்குப் பாராட்டுக்கள்.
    கலந்து கொண்டவன் என்ற முறையில் வாக்களித்தவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.

    போட்டியை நடாத்தியதன் மூலம், பல ஒளிந்திருக்கும் ஆக்கங்களை மேடையேற்ற வைக்கும் தேன் கூட்டின் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    ஜெயபால்

  12. சதயம் said,

    July 29, 2006 at 12:29 am

    ம்ம்ம்ம்….

    கவர்மெண்ட் எக்ஸாம்லதான் பொம்பள புள்ளைங்க ரவுண்டு கட்டி அடிக்கிறாங்கன்னா இங்கயுமா…..இருக்கட்டும் இருக்கட்டும்….

    கதை கேக்கறதுதான் சொகம்னு பயலுக இருந்ததால இந்த பொண்ணுங்க எல்லாம் நல்லா கதை சொல்லீ பரிச தட்டீட்டுப் போய்ட்டாங்க….இருக்கட்டும் இருக்கட்டும்….

    இருக்கட்டும்…இருக்கட்டும்னு சொல்லீட்டு இருந்தா எப்டி…நாம வந்ததுக்கு எதாவது நாலு வார்த்தை சொல்லனும்ல……மொதல்ல பரிசு வாங்கின எல்லாத்துக்கும் வாழ்த்துச் சொல்லிக்கறேன்…அப்பால பரிசு வாங்காத அப்பாவிகளுக்கும்…அடப்பாவிகளுக்கும் அட்வான்சு வாழ்த்துக்கள்…..

    எனக்கென்னவோ நம்ம பொன்ஸ்க்கு மொதப் பரிசு கொடுத்திருக்கலாம்….வித்யாவுக்கு மூனாம் ப்ளேஸ் …ஏதோ இந்த தடவ தப்பு பண்ணீட்டீங்க…அடுத்த வாட்டி பரிசு அனொன்ஸ் பண்றதுக்கு முன்னால நம்ம கைல ஒருவார்த்த கேட்டுட்டு செய்ங்க…..சரியா…

  13. thottarayaswamy said,

    August 10, 2006 at 9:15 pm

    வோட்டுப் போட்ட எல்லோருக்கும் நன்றிகள்.
    better luck next time…i will back next moth…read and vote my poems…

Leave a Comment