08.31.06

News Mode

Posted in அறிவிப்புகள், மேம்பாடு at 4:14 am by Thenkoodu Support

We’ve implemented a quick hack to include some of the tamil news rss on the net and the news blogs which were submitted to thenkoodu for aggregation earlier.

The url for news is : http://thenkoodu.com/?mode=news

08.28.06

ஆகஸ்ட் ‘06 போட்டி முடிவுகள்

Posted in அறிவிப்புகள் at 12:41 am by Thenkoodu Support

ஆகஸ்ட் 2006 வலைப்பதிவுப் போட்டி முடிவுகள்

ஆகஸ்ட் மாதத்தின் தேன்கூடு-தமிழோவியம் போட்டியின் வெற்றிக்கு துணை நின்ற வலைப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி.

மாதந்தோறும் போட்டிக்கு வரும் ஆக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நிச்சயம் மகிழ்ச்சியைத் தருகிறது. போட்டியில் பங்கெடுத்துக்கொண்டு ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் எழுதிய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியில் வெற்றி பெற்ற வலைப்பதிவர்களுக்கு எங்களின் சிறப்புப் பாராட்டுகள்.

பின்னூட்டங்கள் மூலமாகவும், வாக்குப் பதிவில் கலந்து கொண்டு வாக்களித்தும் பதிவர்களை உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் எங்களின் நன்றிகள்.

போட்டி முடிவுகள்:

முதல் பரிசு -

Kongu Raasaa என்ன உறவு - கொங்கு ராசா

இரண்டாவது பரிசு -

G.Gowtham ஒரு நண்பனின் நிஜம் இது! - - ஜி.கௌதம்

மூன்றாவது பரிசு -

Pons உறவும் பிரிவும் - RaasuKutti

நான்காவது இடத்தில் -

உறவுகள்-நட்பு - இளா

எழுத்துத்திறனையும் நல்ல எழுத்துக்களையும் உற்சாகப்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் வெற்றி தோல்வியை விட பங்கேற்பு என்பதே திறமையை நிரூபிக்கும் முயற்சி. அந்த விதத்தில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களையும் பாராட்டுவதில் மகிழ்கிறோம்.

வலைப்பதிவுகளின் சாத்தியக்கூறுகளையும், வலைப்பதிவர்களின் எல்லையற்ற திறமையையும் அவர்கள் பாணியிலேயே சுலபமாக சுவாரசியமாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு பயிற்சிக்களமாகவே இந்த போட்டிகளை நாங்கள் பார்க்கிறோம். இதில் வெற்றி, ஒரு உற்சாக உந்துதல். ஆனால் முடிவுகள் முழுமையானதல்ல என்பதனை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

முன்னரே குறிப்பிட்ட படி, இந்த போட்டிகள் குறித்த ஆக்கபூர்வமான மாற்று கருத்துக்களும், நல்ல பல ஆலோசனைகளும் எங்களுக்கு பல வாசகர்களிடமிருந்தும் கிடைத்துள்ளன. இவற்றில் ஒரு ஆலோசனையை செயல்படுத்தும் விதமாக இந்த மாதப் போட்டியின் முடிவுகள் வாசகர் வாக்கெடுப்பு(80%), நடுவர் குழுவின் கருத்து(20%) ஆகியவற்றின் துணையுடன் முடிவு செய்யப் பட்டிருக்கிறது.

போட்டியில் நடுவர்களாகச் செயல்பட இசைந்த நிலா, இளவஞ்சி இருவருக்கும் எங்களின் நன்றிகள். நடுவர்களின் கணிப்பு மற்றும் போட்டியின் முடிவுகள் குறித்த புள்ளி விபரங்கள் கீழே பெட்டிகளில் காணலாம். ( போட்டியில் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10 ஆக்கங்கள் மட்டுமே, பெயர்,வாக்கெடுப்பு விபரங்கள் தெரிவிக்கப்படாமல் நடுவர்களுக்கு அனுப்பப்பட்டது. )

‘உறவுகள்’ - தலைப்பினைக் கொடுத்ததுடன் மட்டுமல்லாது , அன்புடன் எங்களுடன் ஒத்துழைத்ததற்கும், போட்டி முடிவில் நடுவர்குழுவில் பங்கேற்று மதிப்பிட்டமைக்கும், இந்தப் போட்டிகளின் தொடர்ச்சிக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தமைக்கும் திருமதி. நிலா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

தேன்கூடு - தமிழோவியம் வலைப்பதிவுப் போட்டிகளின் அடுத்தடுத்த மாதங்களின் போட்டிகளிலும் வாக்கெடுப்புகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பதிவர்களை உற்சாகப்படுத்துமாறு வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி, வணக்கம்.

(பி.கு: தவிர்க்க இயலாத காரணத்தினால் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் போட்டிக்கான மதிப்பீடுகளை அனுப்ப இயலவில்லையென்று இளவஞ்சியிடமிருந்து தகவல் வந்திருக்கிறது. )

(பி.கு: செப்டம்பர் மாதப் போட்டியின் நடுவர்குழுவில் பங்கேற்க அல்லது பரிந்துரைக்க விரும்பும் வாசகர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். குழுவின் முடிவுகள் 30 சதவிகிதம் வரை வாக்கெடுப்பின் முடிவுகளை பாதிக்கக்கூடும். ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.)



வாசகர்களின் மதிப்பீடுகள்:

100%  80%
1 என்ன உறவு ? - கொங்கு ராசா 34.4% 27.52
2 உறவுகள்-நட்பு - இளா 22.1% 17.68
3 ஒரு நண்பனின் நிஜம் இது! - ஜி.கௌதம் 20.8% 16.64
4 உறவும் பிரிவும் - RaasuKutti 17.5% 14
5 பாது காப்பு உறவு - போதும் காப்பு உதறு - RaasuKutti 16.9% 13.52
6 தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி - குந்தவை வந்தியத்தேவன் 16.9% 13.52
7 கீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சி - சுரேஷ் (penathal Suresh) 14.9% 11.92
8 உறவில்லாத உறவு - ஜெஸிலா 14.3% 11.44
9 களத்து வீடு - சிறுகதை - உமா கதிர் 14.3% 11.44
10 சொக்கலிங்கத்தின் மரணம் - சிறுகதை - Haranprasanna 14.3% 11.44

 இந்த மாதம் நடந்த ஓட்டெடுப்பின் முழுமையான விபரங்களை இங்கே சென்று காணலாம்.

நடுவர் குழுவின் மதிப்பீடுகள்:

100%  20%
2 என்ன உறவு ? 79% 15.8
8 உறவுகள் - நட்பு 57% 11.4
3 ஒரு நண்பனின் நிஜம் 79% 15.8
4 உறவும் பிரிவும் 77% 15.4
7 பாது காப்பு உறவு - போதும் காப்பு உதறு 72% 14.4
6 தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி 74% 14.8
5 கீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சி 75% 15
9 உறவில்லாத உறவு 56% 11.2
10 களத்து வீடு 54% 10.8
1 சொக்கலிங்கத்தின் மரணம் 85% 17

 

இறுதி முடிவுகள்:

1 என்ன உறவு ? - கொங்கு ராசா 43.32
2 ஒரு நண்பனின் நிஜம் இது! - ஜி.கௌதம் 32.44
3 உறவும் பிரிவும் - RaasuKutti 29.4
4 உறவுகள்-நட்பு - இளா 29.08
5 சொக்கலிங்கத்தின் மரணம் - சிறுகதை - Haranprasanna 28.44
6 தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி - குந்தவை வந்தியத்தேவன 28.32
7 பாது காப்பு உறவு - போதும் காப்பு உதறு - RaasuKutti 27.92
8 கீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சி - சுரேஷ் (penathal Suresh) 26.92
9 உறவில்லாத உறவு - ஜெஸிலா 22.64
10 களத்து வீடு - சிறுகதை - உமா கதிர் 22.24

08.21.06

ஆகஸ்ட் - விமர்சனங்கள்

Posted in அறிவிப்புகள் at 6:07 pm by Thenkoodu Support

08.03.06

Comments Pinger

Posted in அறிவிப்புகள் at 2:39 am by Thenkoodu Support

If you have visited the Control Panel recently, you might have noticed that we have introduced a comments pinger service. This will enable you to display the number of comments on your post in the aggregator page of Thenkoodu.com - Tamil Blogs Portal. Comments pinger code could be found in your control panel as well as here.

Q&A

Q: What happened to earlier announced Thenkoodu Comments Aggregator (BETA)?
A: First of all, our sincere thanks to all those who have participated in the TK Comments Aggregator BETA Program. Though it was an innovative idea, it wasn’t scalable enough. We are currently in the process of dropping out that idea and we recommend our bloggers to use the newly introduced comments pinger service. We’ll soon be sending a notification mail to those bloggers who have participated in the previous BETA programme.

Q: Is this service is only for the registered bloggers in Thenkoodu?
A: No, This service is common for all the blogs being aggregated in Thenkoodu.com - Tamil Blogs Portal. You’ll have to just copy and paste the Comments Pinger code in your template.


Important: Comments Moderation Highly Recommended.