08.28.06
ஆகஸ்ட் ‘06 போட்டி முடிவுகள்
ஆகஸ்ட் 2006 வலைப்பதிவுப் போட்டி முடிவுகள்
ஆகஸ்ட் மாதத்தின் தேன்கூடு-தமிழோவியம் போட்டியின் வெற்றிக்கு துணை நின்ற வலைப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி.
மாதந்தோறும் போட்டிக்கு வரும் ஆக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நிச்சயம் மகிழ்ச்சியைத் தருகிறது. போட்டியில் பங்கெடுத்துக்கொண்டு ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் எழுதிய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியில் வெற்றி பெற்ற வலைப்பதிவர்களுக்கு எங்களின் சிறப்புப் பாராட்டுகள்.
பின்னூட்டங்கள் மூலமாகவும், வாக்குப் பதிவில் கலந்து கொண்டு வாக்களித்தும் பதிவர்களை உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் எங்களின் நன்றிகள்.
போட்டி முடிவுகள்:
முதல் பரிசு -
என்ன உறவு - கொங்கு ராசா
இரண்டாவது பரிசு -
ஒரு நண்பனின் நிஜம் இது! - - ஜி.கௌதம்
மூன்றாவது பரிசு -
உறவும் பிரிவும் - RaasuKutti
நான்காவது இடத்தில் -
உறவுகள்-நட்பு - இளா
எழுத்துத்திறனையும் நல்ல எழுத்துக்களையும் உற்சாகப்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் வெற்றி தோல்வியை விட பங்கேற்பு என்பதே திறமையை நிரூபிக்கும் முயற்சி. அந்த விதத்தில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களையும் பாராட்டுவதில் மகிழ்கிறோம்.
வலைப்பதிவுகளின் சாத்தியக்கூறுகளையும், வலைப்பதிவர்களின் எல்லையற்ற திறமையையும் அவர்கள் பாணியிலேயே சுலபமாக சுவாரசியமாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு பயிற்சிக்களமாகவே இந்த போட்டிகளை நாங்கள் பார்க்கிறோம். இதில் வெற்றி, ஒரு உற்சாக உந்துதல். ஆனால் முடிவுகள் முழுமையானதல்ல என்பதனை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
முன்னரே குறிப்பிட்ட படி, இந்த போட்டிகள் குறித்த ஆக்கபூர்வமான மாற்று கருத்துக்களும், நல்ல பல ஆலோசனைகளும் எங்களுக்கு பல வாசகர்களிடமிருந்தும் கிடைத்துள்ளன. இவற்றில் ஒரு ஆலோசனையை செயல்படுத்தும் விதமாக இந்த மாதப் போட்டியின் முடிவுகள் வாசகர் வாக்கெடுப்பு(80%), நடுவர் குழுவின் கருத்து(20%) ஆகியவற்றின் துணையுடன் முடிவு செய்யப் பட்டிருக்கிறது.
போட்டியில் நடுவர்களாகச் செயல்பட இசைந்த நிலா, இளவஞ்சி இருவருக்கும் எங்களின் நன்றிகள். நடுவர்களின் கணிப்பு மற்றும் போட்டியின் முடிவுகள் குறித்த புள்ளி விபரங்கள் கீழே பெட்டிகளில் காணலாம். ( போட்டியில் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10 ஆக்கங்கள் மட்டுமே, பெயர்,வாக்கெடுப்பு விபரங்கள் தெரிவிக்கப்படாமல் நடுவர்களுக்கு அனுப்பப்பட்டது. )
‘உறவுகள்’ - தலைப்பினைக் கொடுத்ததுடன் மட்டுமல்லாது , அன்புடன் எங்களுடன் ஒத்துழைத்ததற்கும், போட்டி முடிவில் நடுவர்குழுவில் பங்கேற்று மதிப்பிட்டமைக்கும், இந்தப் போட்டிகளின் தொடர்ச்சிக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தமைக்கும் திருமதி. நிலா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
தேன்கூடு - தமிழோவியம் வலைப்பதிவுப் போட்டிகளின் அடுத்தடுத்த மாதங்களின் போட்டிகளிலும் வாக்கெடுப்புகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பதிவர்களை உற்சாகப்படுத்துமாறு வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி, வணக்கம்.
(பி.கு: தவிர்க்க இயலாத காரணத்தினால் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் போட்டிக்கான மதிப்பீடுகளை அனுப்ப இயலவில்லையென்று இளவஞ்சியிடமிருந்து தகவல் வந்திருக்கிறது. )
(பி.கு: செப்டம்பர் மாதப் போட்டியின் நடுவர்குழுவில் பங்கேற்க அல்லது பரிந்துரைக்க விரும்பும் வாசகர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். குழுவின் முடிவுகள் 30 சதவிகிதம் வரை வாக்கெடுப்பின் முடிவுகளை பாதிக்கக்கூடும். ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.)
வாசகர்களின் மதிப்பீடுகள்:
| 100% | 80% | ||
|---|---|---|---|
| 1 | என்ன உறவு ? - கொங்கு ராசா | 34.4% | 27.52 |
| 2 | உறவுகள்-நட்பு - இளா | 22.1% | 17.68 |
| 3 | ஒரு நண்பனின் நிஜம் இது! - ஜி.கௌதம் | 20.8% | 16.64 |
| 4 | உறவும் பிரிவும் - RaasuKutti | 17.5% | 14 |
| 5 | பாது காப்பு உறவு - போதும் காப்பு உதறு - RaasuKutti | 16.9% | 13.52 |
| 6 | தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி - குந்தவை வந்தியத்தேவன் | 16.9% | 13.52 |
| 7 | கீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சி - சுரேஷ் (penathal Suresh) | 14.9% | 11.92 |
| 8 | உறவில்லாத உறவு - ஜெஸிலா | 14.3% | 11.44 |
| 9 | களத்து வீடு - சிறுகதை - உமா கதிர் | 14.3% | 11.44 |
| 10 | சொக்கலிங்கத்தின் மரணம் - சிறுகதை - Haranprasanna | 14.3% | 11.44 |
இந்த மாதம் நடந்த ஓட்டெடுப்பின் முழுமையான விபரங்களை இங்கே சென்று காணலாம்.
நடுவர் குழுவின் மதிப்பீடுகள்:
| 100% | 20% | ||
|---|---|---|---|
| 2 | என்ன உறவு ? | 79% | 15.8 |
| 8 | உறவுகள் - நட்பு | 57% | 11.4 |
| 3 | ஒரு நண்பனின் நிஜம் | 79% | 15.8 |
| 4 | உறவும் பிரிவும் | 77% | 15.4 |
| 7 | பாது காப்பு உறவு - போதும் காப்பு உதறு | 72% | 14.4 |
| 6 | தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி | 74% | 14.8 |
| 5 | கீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சி | 75% | 15 |
| 9 | உறவில்லாத உறவு | 56% | 11.2 |
| 10 | களத்து வீடு | 54% | 10.8 |
| 1 | சொக்கலிங்கத்தின் மரணம் | 85% | 17 |
இறுதி முடிவுகள்:
| 1 | என்ன உறவு ? - கொங்கு ராசா | 43.32 |
| 2 | ஒரு நண்பனின் நிஜம் இது! - ஜி.கௌதம் | 32.44 |
| 3 | உறவும் பிரிவும் - RaasuKutti | 29.4 |
| 4 | உறவுகள்-நட்பு - இளா | 29.08 |
| 5 | சொக்கலிங்கத்தின் மரணம் - சிறுகதை - Haranprasanna | 28.44 |
| 6 | தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி - குந்தவை வந்தியத்தேவன | 28.32 |
| 7 | பாது காப்பு உறவு - போதும் காப்பு உதறு - RaasuKutti | 27.92 |
| 8 | கீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சி - சுரேஷ் (penathal Suresh) | 26.92 |
| 9 | உறவில்லாத உறவு - ஜெஸிலா | 22.64 |
| 10 | களத்து வீடு - சிறுகதை - உமா கதிர் | 22.24 |

துளசி கோபால் said,
August 28, 2006 at 2:50 am
தேன்கூடு & தமிழோவியம் நிர்வாகத்தினருக்கு,
வலைஞர்களுக்கு இப்படி ஊக்கம் கொடுப்பதற்கு பாராட்டுக்கள்.
மிகவும் மனமகிழ்ச்சி அடைகின்றேன்.
வெற்றிபெற்றவர்களுக்கும், போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும்
அன்பும், பாராட்டுகளும்.
மீண்டும் அடுத்தமாதம் சந்திக்கும்வரை வணக்கம்.
ஜி.கௌதம் said,
August 28, 2006 at 3:15 am
வணக்கம் வலை உலக நண்பர்களே!
கரும்பு தின்னக் கூலியும் கொடுத்திருக்கிறீர்கள்!
தேன்கூடு போட்டியில் இரண்டாம் பரிசு!!
என்னோடு வாழ்ந்து, என்னைச் செதுக்கிப்போன நண்பன் திருப்பதிசாமி பற்றி
உலகத்தமிழ் நண்பர்களுக்குச் சொல்லவேண்டும் என்பதே என் ஆசை.
அதை உருப்படியாகச் சொல்லியிருக்கிறேனா என்பது தெரியவில்லை.
ஓரளவுக்கு மனநிறைவடைந்தேன் என்பது உண்மையே.
இதைப் பலரும் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான்
தேன்கூடு போட்டியில் இணைத்தேன்.
படித்து நெகிழ்ந்த நீங்கள் இரண்டாம் பரிசுக்குரியதாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்!
இந்த வெற்றி எனக்கானது அல்ல.
நான் வெறும் கருவி மட்டுமே, நண்பன் திருப்பதிசாமியின் வெற்றி இது!
சினிமாவில் ஒருவன் எத்தனை வெற்றிகள் கொடுத்திருந்தாலும்
அவனது சமீபத்திய தோல்விதான் அவனைத் தீர்மானிக்கும். துரத்தியடிக்கும்.
கணேஷ், ஆஸாத் என இரு பெரும் வெற்றிப் படங்களை தெலுங்கில் இயக்கியிருந்தாலும்
நரசிம்மா என்ற சமீபத்திய தோல்விப் படத்தைக் கொடுக்க நேர்ந்ததால்
திருப்பதிசாமி என்ற சாதனையாளனை திரையுலகம் மறந்து விட்டது.
‘ஒரு நண்பனின் நிஜம் இது’ என்ற இந்த பரிசுக்குரிய படைப்பு மூலமாக
திருப்பதிசாமி சமீபத்திய வெற்றியையே விட்டுச் சென்றதாக நான் கருதுகிறேன்.
இந்த வெற்றி அவனுக்கே!
செத்தும் ஜெயித்தான் திருப்பதிசாமி!
வாக்களித்த நண்பர்களுக்கும்
வாய்ப்பளித்த தேன்கூட்டிற்கும்
உலகம் காணக் களம் கொடுத்த தமிழ்மணம் மற்றும் தேன்கூட்டிற்கும்
என்னை எழுதத் தூண்டிய நண்பர் கடல் கணேசனுக்கும்
மற்றும்
பின்னூட்டத்தில் ஆறுதல் சொன்ன, ஆதரவுத் தோள் கொடுத்த, திருப்பதி பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அத்தனை பேருக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்!
உடன் பரிசு பெற்றிருக்கும் கொங்குராசா, ராசுக்குட்டி மற்றும் இளாவுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
முன்வரிசைக்கு வந்திருக்கும் படைப்புகளைப் பெற்றெடுத்த
Haranprasanna, குந்தவை வந்தியத்தேவன், (மறுபடியும்) RaasuKutti,
சுரேஷ் (penathal Suresh),ஜெஸிலா மற்றும் உமா கதிருக்கும் வாழ்த்துக்கள்.
கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.
Bala Subra said,
August 28, 2006 at 3:17 am
ஆர்வமுடன் கலந்து கொண்டவர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நன்றி & வாழ்த்துகள்.
ஜி.கௌதம் said,
August 28, 2006 at 3:17 am
நன்றி நவிலலில் தமிழோவியம் பெயர் விடுபட்டுப் போய்விட்டது!
ஸ்லிப் ஆஃப் த ஃபிங்கு!!
தமிழோவியத்துக்கும் ‘ஓ’ போடுகிறேன்!
DesiPundit » Archives » வெற்றி பெற்றவர்களுக்கு, said,
August 28, 2006 at 9:07 am
[…] போட்டி முடிவுகள் வந்தாச்சு. […]
லிவிங் ஸ்மைல் வித்யா said,
August 28, 2006 at 10:03 am
முதல் பரிசு பெற்ற கொங்கு ராசாவிற்கும், இரண்டாம் பரிசு பெற்ற ஜி. கௌதமிற்கும், 3வதாக வந்த ராசுக்குட்டிக்கும், 4ம் இடத்தை பெற்ற இளாவிற்கும் என் வாழ்த்துக்கள்…
தொடர்ந்து எழுத்தாளர்களை ஊக்குவித்து வரும் தமிழோவியம்+தேன்கூட்டிற்கும் என் சார்பாக வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்…
குறிப்பாக என் கவிதைக்கும் வாக்களித்த 14 நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்….
லிவிங் ஸ்மைல் வித்யா said,
August 28, 2006 at 10:05 am
//குறிப்பாக என் கவிதைக்கும் வாக்களித்த 14 நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்…. //
நன்றிகள் என்பதற்கு பதிலாக வாழ்த்துக்கள் என்று பிழையாக தட்டச்சு செய்து விட்டேன். மாற்றி படிக்கவும்… நன்றி…
tamilmagan said,
August 28, 2006 at 5:03 pm
தேன்கூடு வலைப் பூ போட்டியில் வெற்றி மாலை சூடிய அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
-தமிழ்மகன்
Selvaperumal. K said,
August 29, 2006 at 11:22 am
வெற்றி பெற்ற அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!
இந்த போட்டியில் அதிகமானவர்கள் பங்கேற்பது சிறப்புக்குரியது. தேன்கூடு தொடர்ந்து இப்போட்டிகளை நடத்துவதன் மூலம் பங்கேற்பாளர்களின் சிந்தனையை சிறப்பாக வளர்த்துக் கொள்ள உதவிடும். அவர்களது எழுத்துத் திறனை அதிகரிப்பதற்கும் இது உதவிடும்.
வாழ்த்துக்கள்!
MSV Muthu said,
August 30, 2006 at 8:12 pm
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
எனக்கு ஓட்டு போட்ட அனைத்து மக்களுக்கும் நன்றி.
madhumitha said,
September 2, 2006 at 10:12 pm
போட்டியில் வெற்றி பெற்றோருக்கும், கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் வாழ்த்துகள்
தேன்கூடு, தமிழோவியத்துக்கு நன்றி
mylaikaalai said,
September 21, 2006 at 4:59 am
I guess the voting is restricted baed on IP addres,
some one in my office is already participating in the voting list.
so I am not able to post my vote, (it is more like ottu poodathaan indian)