09.30.06

போட்டி - ஆலோசனைகள்: தெளிவுகள்

Posted in அறிவிப்புகள், போட்டி at 3:33 am by Thenkoodu Support

தேன்கூடு தமிழோவியம் இணைந்து நடத்தும் வலைப்பதிவுகளுக்கான மாதாந்திரப் போட்டியின் அட்டகாசமான வெற்றியைத் தரும் வாசகர்களுக்கும் இனிய வலைப்பதிவர்களுக்கும் நன்றிகள்!

இனி,

தொடர்ந்து ஏராளமான ஆலோசனைகள் வலை நண்பர்கள் அள்ளித்தந்த வண்ணம் இருக்கின்றனர். போட்டியின் வெற்றியில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்திற்கு மிக்க நன்றி.

இந்த போட்டிகளின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்று:

நல்ல எழுத்துக்களை வலைப்பதிவுகளில் ஊக்குவிப்பது, புதிய வலைப்பதிவர்களுக்கு தமிழில் எழுதும் ஆர்வத்தினை உருவாக்குவது.

தேன்கூடு.காம் - தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி, தொகுப்பகம் மற்றும் வலைவாசல் என்ற முறையில் நல்ல எழுத்துக்களை வலைப்பதிவுகளில் ஊக்குவிப்பது எங்களின் முக்கிய நோக்கமாகக் கருதுகிறோம்.

ஒவ்வொரு முறையும் நாங்கள் குறிப்பிடுவது போல, வலைப்பதிவாளர்களின் திறமையை அவர்கள் பாணியில் அவர்கள் பதிவிலேயே வெளிப்படுத்துவதில் உள்ள சுவாரசி்யம் வேறெதிலும் இல்லை என்று நிச்சயம் நம்புகிறோம். ஆக்கங்களில் கூட, வலைப்பதிவுகளின் அனைத்து சாத்தியக்கூறுகளையும் எதிர்பார்க்கிறோம். அது பிளாஷ் மென்பொருளில் செய்யப்பட்டு பதியப்படுவதாக இருக்கலாம்; பாட் கேஸ்டிக் ஆக இருக்கலாம்; புகைப்படங்களாக இருக்கலாம்; வீடியோவாக இருக்கலாம்; அல்லது கவிதை கதை போன்ற அனைத்து படைப்புக்கூறுகளாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், போட்டிக்கான தலைப்பின் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

பெயர் வெளியிடாமல், ஆக்கங்களை நாங்கள் பெற்றுக்கொண்டு பதிப்பிப்பது போன்ற முறைகள் இந்த நோக்கங்களுக்கு தடையாக இருக்கும் என்பதினை மனதில் கொள்ள வேண்டுகிறோம்.

போட்டியில் பங்கேற்பவர்களின் ஆக்கத்திற்கு உடனடியாக கிடைக்கும், பின்னூட்டங்கள்; விமர்சனங்கள் இவையே இங்கு போட்டியாளர்களுக்கு கிடைக்கும் உடனடி பரிசுகள் என்று கருதுகிறோம்.

வாக்கெடுப்பின் முறையிலுள்ள குறைகளைக் குறைக்கும் விதமாக, இந்த மாதத்தின் சில நேரங்களில் சோதனையில் இருந்த முறைகள் வரும் மாதப் போட்டியில் முழுமையாக இருக்கும். இது கள்ள வோட்டுகளின் எண்ணிக்கையை முற்றிலும் குறைக்ககூடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் நிச்சயம் குறைக்கக்கூடும்.( உதா: செப்டம்பர் போட்டியின், கடைசி நாள் கடைசி சில மணித்துளிகளில் ஒரே கணிணியிலிருந்து மீண்டும் மீண்டும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு போட்டியின் நோக்கத்தினை, எங்களின் முயற்சி மற்றும் உழைப்பினை, போட்டியாளர்களின் ஆர்வத்தினை வேடிக்கையாக்க முயற்சி செய்திட்ட சிலரின் முயற்சிகளைத் தவிர்க்கக் கூடும்.)

வரும் மாதங்களின் போட்டிகளில் வேறு சில மாற்றங்களும் உங்கள் ஆதரவுடன் செய்ய நினைத்திருக்கிறோம்!

புரிதலுடன் எங்களைத் தொடர்பு கொண்ட வலைஞர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து, உங்களது கருத்துக்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

அன்புடன்,
தேன்கூடு நண்பர்கள் குழாம்.

09.28.06

செப்டம்பர் ‘06, போட்டி முடிவுகள்

Posted in அறிவிப்புகள் at 6:03 am by Thenkoodu Support

செப்டம்பர் 2006 வலைப்பதிவுப் போட்டி முடிவுகள்

செப்டம்பர் மாதத்தின் தேன்கூடு-தமிழோவியம் போட்டியின் வெற்றிக்கு துணை நின்ற வலைப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி.

மாதந்தோறும் போட்டிக்கு வரும் ஆக்கங்களின் எண்ணிக்கை நிச்சயம் மகிழ்ச்சியைத் தருகிறது. போட்டியில் பங்கெடுத்துக்கொண்டு ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் எழுதிய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியில் வெற்றி பெற்ற வலைப்பதிவர்களுக்கு எங்களின் சிறப்புப் பாராட்டுகள்.

பின்னூட்டங்கள் மூலமாகவும், வாக்குப் பதிவில் கலந்து கொண்டு வாக்களித்தும் பதிவர்களை உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் எங்களின் நன்றிகள்.

போட்டி முடிவுகள்:

முதல் பரிசு -

Azad லூர்து - அபுல் கலாம் ஆசாத்

இரண்டாவது பரிசு -

Raasukutti கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1,2,3,4,5 - - RaasuKutti

மூன்றாவது பரிசு -
Yosippavarஎக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1, 2, 3, 4 - யோசிப்பவர்

நான்காவது இடத்தில் -

நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - முரட்டுக்காளை

எழுத்துத்திறனையும் நல்ல எழுத்துக்களையும் உற்சாகப்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் வெற்றி தோல்வியை விட பங்கேற்பு என்பதே திறமையை நிரூபிக்கும் முயற்சி. அந்த விதத்தில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களையும் பாராட்டுவதில் மகிழ்கிறோம்.

வலைப்பதிவுகளின் சாத்தியக்கூறுகளையும், வலைப்பதிவர்களின் எல்லையற்ற திறமையையும் அவர்கள் பாணியிலேயே சுலபமாக சுவாரசியமாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு பயிற்சிக்களமாகவே இந்த போட்டிகளை நாங்கள் பார்க்கிறோம். இதில் வெற்றி, ஒரு உற்சாக உந்துதல். ஆனால் முடிவுகள் முழுமையானதல்ல என்பதனை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

முன்னரே குறிப்பிட்ட படி, இந்த மாதப் போட்டியின் முடிவுகள் வாசகர் வாக்கெடுப்பு(70%), நடுவர் குழுவின் கருத்து(30%) ஆகியவற்றின் துணையுடன் முடிவு செய்யப் பட்டிருக்கிறது.

போட்டியில் நடுவர்களாகச் செயல்பட இசைந்த நிலா, கொங்கு ராசா, ஆர்வமுடன் நடுவராக இருக்க விருப்பம் தெரிவித்து கலந்து கொண்ட கே.வி.ராஜா ஆகியோருக்கு எங்களின் நன்றிகள். நடுவர்களின் கணிப்பு மற்றும் போட்டியின் முடிவுகள் குறித்த புள்ளி விபரங்கள் கீழே பெட்டிகளில் காணலாம். ( போட்டியில் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10 ஆக்கங்கள் மட்டுமே, பெயர்,வாக்கெடுப்பு விபரங்கள் தெரிவிக்கப்படாமல் நடுவர்களுக்கு அனுப்பப்பட்டது. )

‘கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா’ - தலைப்பினைக் கொடுத்ததுடன் மட்டுமல்லாது , அன்புடன் எங்களுடன் ஒத்துழைத்ததற்கும், போட்டி முடிவில் நடுவர்குழுவில் பங்கேற்று மதிப்பிட்டமைக்கும், இந்தப் போட்டிகளின் தொடர்ச்சிக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தமைக்கும் திரு. கொங்கு ராசா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

வித்தியாசமான தலைப்பைத் தாருங்கள் என்று கேட்டவுடனேயே பல கலக்கலான தலைப்புகளைத் தந்து எங்களை அசரடித்தவர், கொங்கு ராசா. இதில், எந்த தலைப்பிற்கு அனைவராலும் எழுதக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்ற யோசனையை முன் வைத்து, இந்த மாதத் தலைப்பினை தேர்ந்தெடுப்பதில் துணை நின்றோம். தலைப்பில் இருந்த ஆங்கில வார்த்தைக் கலப்பு ஏனோ எங்களையும், ராசாவையும், தலைப்பு தேர்ந்தெடுக்கும் நேரத்தில் உறுத்த வில்லை என்பது சற்றே வருத்தம் தரும் உண்மை:-(. இனி வரும் போட்டிகளில் இத்தகைய கலப்பு முடிந்த அளவிற்கு தவிர்க்கப்படும். சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி.

இந்த மாத தேன்கூடு-தமிழோவியம் போட்டியின் சிறப்புக்கு ஒரு முக்கிய காரணம் திரு. சோம்பேறிபையனின் விமர்சனங்கள் என்று சொன்னால் நிச்சயம் மிகையாகாது. அவருக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள். மேலும், விமர்சனங்களை முன் வைத்த வசந்த, முரட்டுக்காளை ஆகியோரையும் குறிப்பிடுவதில் மகிழ்கிறோம்.

தேன்கூடு - தமிழோவியம் வலைப்பதிவுப் போட்டிகளின் அடுத்தடுத்த மாதங்களின் போட்டிகளிலும் வாக்கெடுப்புகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பதிவர்களை உற்சாகப்படுத்துமாறு வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி, வணக்கம்.

(பி.கு: அக்டோபர் மாதப் போட்டியின் நடுவர்குழுவில் பங்கேற்க அல்லது பரிந்துரைக்க விரும்பும் வாசகர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். குழுவின் முடிவுகள் 30 சதவிகிதம் வரை வாக்கெடுப்பின் முடிவுகளை பாதிக்கக்கூடும். 15 ஆக்கங்கள் வரை நடுவர் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படக்கூடும். ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.)



வாசகர்களின் மதிப்பீடுகள்:

100%  70%
1 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1,2,3,4,5 - ராசுக்குட்டி 35.2% 24.64
2 லூர்து - சிறுகதை - அபுல் கலாம் ஆசாத் 26.7% 18.69
3 சில்லென்று ஒரு காதல் - நெல்லை சிவா 18.2% 12.74
4 கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா - pavanitha 18.2% 12.74
5 எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?1,2,3,4 - யோசிப்பவர் 17.6% 12.32
6 தீயினால் சுட்ட புண்!!! - வெட்டிப்பயல் 17% 11.9
7 நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - முரட்டுக்காளை 16.5% 11.55
8 லிஃப்டாவது கிடைக்குமே! - ஜி.கௌதம் 15.3% 10.71
9 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - இளா 14.8% 10.36
10 சாந்தியக்கா - பாலபாரதி 14.8% 10.36

 இந்த மாதம் நடந்த ஓட்டெடுப்பின் முழுமையான விபரங்களை இங்கே சென்று காணலாம்.

நடுவர் குழுவின் மதிப்பீடுகள்:

100%  10%     10%     10%
1 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1,2,3,4,5 - ராசுக்குட்டி 62 6.2 54 5.4 30 3
2 லூர்து - சிறுகதை - அபுல் கலாம் ஆசாத் 87 8.7 85 8.5 75 7.5
3 சில்லென்று ஒரு காதல் - நெல்லை சிவா 68 6.8 54 5.4 45 4.5
4 கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா - pavanitha 76 7.6 54 5.4 25 2.5
5 எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?1,2,3,4 - யோசிப்பவர் 86 8.6 74 7.4 60 6
6 தீயினால் சுட்ட புண்!!! - வெட்டிப்பயல் 76 7.6 72 7.2 30 3
7 நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - முரட்டுக்காளை 90 9 62 6.2 45 4.5
8 லிஃப்டாவது கிடைக்குமே! - ஜி.கௌதம் 73 7.3 62 6.2 70 7
9 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - இளா 63 6.3 54 5.4 30 3
10 சாந்தியக்கா - பாலபாரதி 84 8.4 64 6.4 40 4

 

இறுதி முடிவுகள்:

1 லூர்து - சிறுகதை - அபுல் கலாம் ஆசாத் 43.39
2 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1,2,3,4,5 - ராசுக்குட்டி 39.24
3 எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?1,2,3,4 - யோசிப்பவர் 34.32
4 நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - முரட்டுக்காளை 31.25
5 லிஃப்டாவது கிடைக்குமே! - ஜி.கௌதம் 31.21
6 தீயினால் சுட்ட புண்!!! - வெட்டிப்பயல் 29.7
7 சில்லென்று ஒரு காதல் - நெல்லை சிவா 29.44
8 சாந்தியக்கா - பாலபாரதி 29.16
9 கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா - pavanitha 28.24
10 கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - இளா 25.06

09.20.06

செப்டம்பர் ‘06, விமர்சனங்கள்

Posted in அறிவிப்புகள் at 11:53 pm by Thenkoodu Support

விமர்சனச் சுட்டிகள்
ஒரு வரி விமர்சனம்! - By முரட்டுக்காளை

தோண்றது…! - வசந்த்

தேன்கூடு செப் 06 படைப்புகள் விமர்சனம் By சோம்பேறி பையன்

15) 71 to 74

14) 66 to 70

13) 61 to 65

12) 56 to 60

11) 51 to 55

10) 46 to 50

9) 41 to 45
8) 36 to 40

7) 31 to 35

6) 26 to 30

5) 21 to 25

4) 16 to 20

3) 11 to 15

2) 6 to 10

1) 1 to 5

கடைசி இரண்டு ஆக்கங்களுக்கான விமர்சனம் : வசந்த் - http://kaalapayani.blogspot.com/2006/09/blog-post_22.html

09.15.06

Google Portlet & Thenkoodu Tools

Posted in அறிவிப்புகள், மேம்பாடு at 5:40 pm by Thenkoodu Support

Why?!

Well, why not?! :-)

Google - The trend setter of web 2.0 has really come out with a nice mechanism to integrate and aggregate instantly any blog posts that falls in to the category of Unicode Tamil. We have been monitoring this for quite some time and we should say that we are very impressed and wish to extend the benefits to our readers by including this in our portal. (There are some annoying catches like even Thenkoodu feed is getting aggregated! We are working on removing such annoyance.)

These posts will be totally un moderated, and will be shown as quickly as possible!

If we project Google aggregation, What is the need for aggregation of Thenkoodu.com - Tamil Blogs Portal?

Good Question Thou! We believe you are aware that Thenkoodu.com - Tamil Blogs portal is not only an aggregator but also a directory. As of now, we have a huge 600+ blogs details collected in our system (To add yours click here). If you ever need to find or locate a particular blog by category or tag or location, you can easily reach them. And further, we have quite a number of services like comments notification etc. which is not a implementation you can get from Google aggregator. Hence, as of now, we will continue to do our very own aggregation too :-)

By the way, we have a list of services we wish to highlight.. some of which we believe you are already aware off!

Few services and tools list:

  1. Thenkoodu - Directory Listing : , By Category, By Tags, By Location
  2. Thenkoodu - Feed details with Technorati Integration (http://thenkoodu.com/?feed=___)
  3. My Thenkoodu - (Read only your favourite blogs)
  4. Customize Thenkoodu - (Customize the look and feel of your page. - Update Preferences)
  5. Thenkoodu - Todays Comments + Comments Pinger Service (Visit Home + http://thenkoodu.com/comments_code.php)
  6. Thenkoodu - Most visited Posts (Visit Home )
  7. Thenkoodu - Badge (http://badge.thenkoodu.com)
  8. Thenkoodu - Tamiloviam Contests (http://thenkoodu.com/contest.php)
  9. Thenkoodu - Dictionary ( Visit Home or http://dictionary.thenkoodu.com - Thanks to Dr.Anbumani, Wiktionary, University of Chicago)
  10. Thenkoodu - Ezines Aggregator (http://ezines.thenkoodu.com - Special Thanks to ChennaiNetwork, Nila Team, Thozhi Team, Noolaham Team and all.)
  11. Thenkoodu - Project Madurai Details Page (http://ezines.thenkoodu.com/pmadurai.php, http://pmadurai.thenkoodu.com - Thanks to Dr.K.Kalyanasundaram & PM Team.)
  12. Thenkoodu - News Aggregator (http://thenkoodu.com/?mode=news or http://news.thenkoodu.com)
  13. Thenkoodu - Anniyalogom Portlet (Thanks to Mr.Venkatramani of Anniyalogam.com)
  14. Thenkoodu - Todays Blogs (Visit Home)
  15. Thenkoodu - Save favourites portlet (Visit Home )
  16. Thenkoodu - “For your Attention” Portlet ( Drop a mail to include your post on “உங்கள் கவனத்திற்கு” Portlet. )
  17. Thenkoodu - Control Panel ( Visit Your Controlpanel to control your blog and to get the latest updates. )

& Now

  1. Thenkoodu - Google Portlet (Visit Home (for 1 hour) or http://google.thenkoodu.com (for 1-6 hours))

By the way, There are more hidden features you can find in Thenkoodu.com - Your regional Blogs Portal with a vision of future. Feel free to explore! :-)

Some of the above services we have not officially announced yet, and are still under development. Although almost all those services are beta or lab products, they are suppose to work smooth too. We appreciate your suggestions and enhancements to improve them. Do drop us a line on whatever you feel.

Few Notes:

Google Portlet : Experimental Service. Blogs that are not aggregated and not as per the policy of Thenkoodu.com are also being displayed. Thenkoodu.com is neither associated with google.com nor responsible for the contents on this page.

Ezines/News Aggregator : This page’s Design/Content is not complete and subject to change. Copyrights of the contents belongs to the respective websites/authority. Thenkoodu.com is neither associated with all those websites nor responsible for their content.

Anniyalogam Tools : These Tools are presented here for easy access only. Thenkoodu.com is not the owner of those tools and Copyrights of those tools if any, belogs to the Anniyalogam Website. Thenkoodu.com does not guarantee or provides support for the anniyalogam tools and services.

Project Madurai : Contents on these pages belongs to Project Madurai Team. We have included this in the portal to support the cause of the great work being done by the team. If any copyrights are there that’s of Project Madurai. We appreciate blog readers to participate in such services for the cause of Tamil.

09.08.06

Support for Blogger BETA & More..

Posted in அறிவிப்புகள், மேம்பாடு at 4:25 am by Thenkoodu Support

The speed of technology is something which we always love to catch :-)

Thenkoodu.com - Tamil Blogs Portal has been enhanced to include support for the needs of the most commonly used blogger service of Tamil Bloggers.

Yes, Blogger BETA feed is fully supported in Thenkoodu.com - Tamil Blogs Portal.

We’ve updated our code for the enhanced support of more feed types. If you face any problems, please feel free to contact us.

Comments Pinger Code *BETA* for Blogger BETA is under development, and will be released soon.. However, if you choose to use the classic template, the same code should work!


UPDATE : Code for New Blogger BETA was already released. Please visit your control panel to get the new code or you may get the code from here too.