09.28.06
செப்டம்பர் ‘06, போட்டி முடிவுகள்
செப்டம்பர் 2006 வலைப்பதிவுப் போட்டி முடிவுகள்
செப்டம்பர் மாதத்தின் தேன்கூடு-தமிழோவியம் போட்டியின் வெற்றிக்கு துணை நின்ற வலைப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி.
மாதந்தோறும் போட்டிக்கு வரும் ஆக்கங்களின் எண்ணிக்கை நிச்சயம் மகிழ்ச்சியைத் தருகிறது. போட்டியில் பங்கெடுத்துக்கொண்டு ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் எழுதிய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியில் வெற்றி பெற்ற வலைப்பதிவர்களுக்கு எங்களின் சிறப்புப் பாராட்டுகள்.
பின்னூட்டங்கள் மூலமாகவும், வாக்குப் பதிவில் கலந்து கொண்டு வாக்களித்தும் பதிவர்களை உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் எங்களின் நன்றிகள்.
போட்டி முடிவுகள்:
முதல் பரிசு -
லூர்து - அபுல் கலாம் ஆசாத்
இரண்டாவது பரிசு -
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1,2,3,4,5 - - RaasuKutti
மூன்றாவது பரிசு -
எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1, 2, 3, 4 - யோசிப்பவர்
நான்காவது இடத்தில் -
நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - முரட்டுக்காளை
எழுத்துத்திறனையும் நல்ல எழுத்துக்களையும் உற்சாகப்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் வெற்றி தோல்வியை விட பங்கேற்பு என்பதே திறமையை நிரூபிக்கும் முயற்சி. அந்த விதத்தில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களையும் பாராட்டுவதில் மகிழ்கிறோம்.
வலைப்பதிவுகளின் சாத்தியக்கூறுகளையும், வலைப்பதிவர்களின் எல்லையற்ற திறமையையும் அவர்கள் பாணியிலேயே சுலபமாக சுவாரசியமாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு பயிற்சிக்களமாகவே இந்த போட்டிகளை நாங்கள் பார்க்கிறோம். இதில் வெற்றி, ஒரு உற்சாக உந்துதல். ஆனால் முடிவுகள் முழுமையானதல்ல என்பதனை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
முன்னரே குறிப்பிட்ட படி, இந்த மாதப் போட்டியின் முடிவுகள் வாசகர் வாக்கெடுப்பு(70%), நடுவர் குழுவின் கருத்து(30%) ஆகியவற்றின் துணையுடன் முடிவு செய்யப் பட்டிருக்கிறது.
போட்டியில் நடுவர்களாகச் செயல்பட இசைந்த நிலா, கொங்கு ராசா, ஆர்வமுடன் நடுவராக இருக்க விருப்பம் தெரிவித்து கலந்து கொண்ட கே.வி.ராஜா ஆகியோருக்கு எங்களின் நன்றிகள். நடுவர்களின் கணிப்பு மற்றும் போட்டியின் முடிவுகள் குறித்த புள்ளி விபரங்கள் கீழே பெட்டிகளில் காணலாம். ( போட்டியில் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10 ஆக்கங்கள் மட்டுமே, பெயர்,வாக்கெடுப்பு விபரங்கள் தெரிவிக்கப்படாமல் நடுவர்களுக்கு அனுப்பப்பட்டது. )
‘கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா’ - தலைப்பினைக் கொடுத்ததுடன் மட்டுமல்லாது , அன்புடன் எங்களுடன் ஒத்துழைத்ததற்கும், போட்டி முடிவில் நடுவர்குழுவில் பங்கேற்று மதிப்பிட்டமைக்கும், இந்தப் போட்டிகளின் தொடர்ச்சிக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தமைக்கும் திரு. கொங்கு ராசா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
வித்தியாசமான தலைப்பைத் தாருங்கள் என்று கேட்டவுடனேயே பல கலக்கலான தலைப்புகளைத் தந்து எங்களை அசரடித்தவர், கொங்கு ராசா. இதில், எந்த தலைப்பிற்கு அனைவராலும் எழுதக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்ற யோசனையை முன் வைத்து, இந்த மாதத் தலைப்பினை தேர்ந்தெடுப்பதில் துணை நின்றோம். தலைப்பில் இருந்த ஆங்கில வார்த்தைக் கலப்பு ஏனோ எங்களையும், ராசாவையும், தலைப்பு தேர்ந்தெடுக்கும் நேரத்தில் உறுத்த வில்லை என்பது சற்றே வருத்தம் தரும் உண்மை:-(. இனி வரும் போட்டிகளில் இத்தகைய கலப்பு முடிந்த அளவிற்கு தவிர்க்கப்படும். சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி.
இந்த மாத தேன்கூடு-தமிழோவியம் போட்டியின் சிறப்புக்கு ஒரு முக்கிய காரணம் திரு. சோம்பேறிபையனின் விமர்சனங்கள் என்று சொன்னால் நிச்சயம் மிகையாகாது. அவருக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள். மேலும், விமர்சனங்களை முன் வைத்த வசந்த, முரட்டுக்காளை ஆகியோரையும் குறிப்பிடுவதில் மகிழ்கிறோம்.
தேன்கூடு - தமிழோவியம் வலைப்பதிவுப் போட்டிகளின் அடுத்தடுத்த மாதங்களின் போட்டிகளிலும் வாக்கெடுப்புகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பதிவர்களை உற்சாகப்படுத்துமாறு வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி, வணக்கம்.
(பி.கு: அக்டோபர் மாதப் போட்டியின் நடுவர்குழுவில் பங்கேற்க அல்லது பரிந்துரைக்க விரும்பும் வாசகர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். குழுவின் முடிவுகள் 30 சதவிகிதம் வரை வாக்கெடுப்பின் முடிவுகளை பாதிக்கக்கூடும். 15 ஆக்கங்கள் வரை நடுவர் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படக்கூடும். ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.)
வாசகர்களின் மதிப்பீடுகள்:
| 100% | 70% | ||
|---|---|---|---|
| 1 | கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1,2,3,4,5 - ராசுக்குட்டி | 35.2% | 24.64 |
| 2 | லூர்து - சிறுகதை - அபுல் கலாம் ஆசாத் | 26.7% | 18.69 |
| 3 | சில்லென்று ஒரு காதல் - நெல்லை சிவா | 18.2% | 12.74 |
| 4 | கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா - pavanitha | 18.2% | 12.74 |
| 5 | எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?1,2,3,4 - யோசிப்பவர் | 17.6% | 12.32 |
| 6 | தீயினால் சுட்ட புண்!!! - வெட்டிப்பயல் | 17% | 11.9 |
| 7 | நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - முரட்டுக்காளை | 16.5% | 11.55 |
| 8 | லிஃப்டாவது கிடைக்குமே! - ஜி.கௌதம் | 15.3% | 10.71 |
| 9 | கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - இளா | 14.8% | 10.36 |
| 10 | சாந்தியக்கா - பாலபாரதி | 14.8% | 10.36 |
இந்த மாதம் நடந்த ஓட்டெடுப்பின் முழுமையான விபரங்களை இங்கே சென்று காணலாம்.
நடுவர் குழுவின் மதிப்பீடுகள்:
| 100% | 10% | 10% | 10% | ||||
|---|---|---|---|---|---|---|---|
| 1 | கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1,2,3,4,5 - ராசுக்குட்டி | 62 | 6.2 | 54 | 5.4 | 30 | 3 |
| 2 | லூர்து - சிறுகதை - அபுல் கலாம் ஆசாத் | 87 | 8.7 | 85 | 8.5 | 75 | 7.5 |
| 3 | சில்லென்று ஒரு காதல் - நெல்லை சிவா | 68 | 6.8 | 54 | 5.4 | 45 | 4.5 |
| 4 | கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா - pavanitha | 76 | 7.6 | 54 | 5.4 | 25 | 2.5 |
| 5 | எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?1,2,3,4 - யோசிப்பவர் | 86 | 8.6 | 74 | 7.4 | 60 | 6 |
| 6 | தீயினால் சுட்ட புண்!!! - வெட்டிப்பயல் | 76 | 7.6 | 72 | 7.2 | 30 | 3 |
| 7 | நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - முரட்டுக்காளை | 90 | 9 | 62 | 6.2 | 45 | 4.5 |
| 8 | லிஃப்டாவது கிடைக்குமே! - ஜி.கௌதம் | 73 | 7.3 | 62 | 6.2 | 70 | 7 |
| 9 | கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - இளா | 63 | 6.3 | 54 | 5.4 | 30 | 3 |
| 10 | சாந்தியக்கா - பாலபாரதி | 84 | 8.4 | 64 | 6.4 | 40 | 4 |
இறுதி முடிவுகள்:
| 1 | லூர்து - சிறுகதை - அபுல் கலாம் ஆசாத் | 43.39 |
| 2 | கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1,2,3,4,5 - ராசுக்குட்டி | 39.24 |
| 3 | எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?1,2,3,4 - யோசிப்பவர் | 34.32 |
| 4 | நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - முரட்டுக்காளை | 31.25 |
| 5 | லிஃப்டாவது கிடைக்குமே! - ஜி.கௌதம் | 31.21 |
| 6 | தீயினால் சுட்ட புண்!!! - வெட்டிப்பயல் | 29.7 |
| 7 | சில்லென்று ஒரு காதல் - நெல்லை சிவா | 29.44 |
| 8 | சாந்தியக்கா - பாலபாரதி | 29.16 |
| 9 | கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா - pavanitha | 28.24 |
| 10 | கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - இளா | 25.06 |

Ramachandranusha said,
September 28, 2006 at 8:47 am
ஆசாத்ஜி வாழ்த்துக்கள். ஓட்டு போட்டவங்களுக்கும் பெருமை இருக்காதா என்ன? ஆனா என்னுடைய ஓட்டு வாங்கியவர்கள்
தேர்வாகவில்லையே?
பரிசு பெற்ற ராசுக்குட்டி, யோசிப்பவர், முரட்டு காளைக்கு வாழ்த்துக்கள்
Bala said,
September 28, 2006 at 9:00 am
ஆசாத் சொல்லி அடிச்சிருக்கார் :) வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
Rajalukshmi said,
September 28, 2006 at 9:19 am
Congradulations Azad..
Congradulations Raasukutti and All the Best for getting first prize next time…
Congradulations yoosippavar …
Yennakku vakkallithu anbu ullangalukkum yenathu Manamaarntha Nandrigal:-)
நடராஜன் ஸ்ரீனிவாசன் said,
September 28, 2006 at 10:01 am
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
ஆசாத் பாய் அசத்தலான வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
என் படைப்புகளுக்கு வாக்களித்தவர்களுக்கு என் அன்பான நன்றிகள்.
தூக்கல் வாழ்க்கை என்ற என் மரபுக் கவிதை பெற்றிருக்கும் வாக்குகள் எனக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது.
தேன்கூட்டின் இந்த போட்டி ஒரு படைப்புப் பேரலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
Anonymous said,
September 28, 2006 at 11:42 am
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
எனது இரு சிறுகதைகளுக்கும் வாக்களித்த அன்பர்களுக்கு என் நன்றிகள்.
நல்ல களம் அமைத்துக் கொடுத்த கொங்கு ராசாவிற்கும், சிறப்புற நடத்திக்கொண்டிருக்கும் தேன்கூடு-தமிழோவியத்திற்கும் நன்றிகள் பல.
இந்தப் போட்டி குறித்து மேலும் சில ஆலோசனைகள் சொல்ல எண்ணமுண்டு. வடிவம் கொடுத்து விரைவில் பதிப்பிக்கிறேன்.
லிவிங் ஸ்மைல் said,
September 28, 2006 at 11:53 am
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்,
போட்டியை நடத்தும், தேன்கூடுக்கு என் நன்றிகள்
muthu(tamizhini) said,
September 28, 2006 at 12:24 pm
congrats friends
jazeela said,
September 28, 2006 at 1:26 pm
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
துளசி கோபால் said,
September 28, 2006 at 2:10 pm
வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும்
அன்பான வாழ்த்து(க்)கள்.
ஜி.கௌதம் said,
September 28, 2006 at 3:00 pm
வெற்றியாளர்களான அபுல் கலாம் ஆஸாத், ராசுக்குட்டி, யோசிப்பவர், ஆறுதல் பரிசுக்காரரான முரட்டுக்காளை,
முதல் பத்துக்குள் வந்த வெட்டிப்பயல், நெல்லை சிவா, பாலபாரதி, அனிதா பவன்குமார், இளா,
தலைப்புக் கொடுத்த கொங்கு ராசா,
போட்டி நடத்திய தேன்கூடு - தமிழோவியம்,
படைப்புகளைச் சுமந்து பரப்பிய தமிழ்மணம்,
நடுவர் குழு,
விமரிசனம் செய்த சோம்பேறிப்பையன்,
வாக்களித்த வாசகர்கள்,
முக்கியமாக போட்டியில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும்
என் சார்பில் நன்றிப் பூங்கொத்து!
நெல்லை சிவா said,
September 28, 2006 at 9:14 pm
//*வெற்றி பெற்ற அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
எனது இரு சிறுகதைகளுக்கும் வாக்களித்த அன்பர்களுக்கு என் நன்றிகள்.
நல்ல களம் அமைத்துக் கொடுத்த கொங்கு ராசாவிற்கும், சிறப்புற நடத்திக்கொண்டிருக்கும் தேன்கூடு-தமிழோவியத்திற்கும் நன்றிகள் பல.
இந்தப் போட்டி குறித்து மேலும் சில ஆலோசனைகள் சொல்ல எண்ணமுண்டு. வடிவம் கொடுத்து விரைவில் பதிப்பிக்கிறேன். *//
நான் சொல்லிய கருத்து, கருத்து சொல்லும் அவசரத்தில், பெயர் பதிக்க மறந்துட்டேன் போல.. அதுதான் மீண்டும்.
முரட்டுக்காளை said,
September 29, 2006 at 5:34 am
//வெற்றியாளர்களான அபுல் கலாம் ஆஸாத், ராசுக்குட்டி, யோசிப்பவர், ஆறுதல் பரிசுக்காரரான முரட்டுக்காளை,
முதல் பத்துக்குள் வந்த வெட்டிப்பயல், நெல்லை சிவா, பாலபாரதி, அனிதா பவன்குமார், இளா,
தலைப்புக் கொடுத்த கொங்கு ராசா,
போட்டி நடத்திய தேன்கூடு - தமிழோவியம்,
படைப்புகளைச் சுமந்து பரப்பிய தமிழ்மணம்,
நடுவர் குழு,
விமரிசனம் செய்த சோம்பேறிப்பையன்,
வாக்களித்த வாசகர்கள்,
முக்கியமாக போட்டியில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும்
என் சார்பில் நன்றிப் பூங்கொத்து!
//
வெற்றி பெற்ற ஆசாத், ராசுக்குட்டி, யோசிப்பவர் - வாழ்த்துக்கள் !
என்னை ஊக்கப்படுத்திய, விமர்சனங்களுக்கு பாராட்டிய, வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல !
revathi narasimhan said,
September 29, 2006 at 6:40 am
போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். அபுல் கலாம் ஆசாத்,ராசுக்குட்டி,யோசிப்பவர்,
பாலபாரதி,அனிதா,
நெல்லை சிவா,இளா,வெட்டிப்பயல்,கௌதம்.ஜி.
முரட்டுகாளை எல்லொருக்கும் நல்ல பதிவுகளைக் கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Azad said,
September 29, 2006 at 9:36 pm
Dear All,
Thank you very much.
On 4th Oct. I will be returning to Chennai and will be able to say my thanks in detail.
anbudan
Azad
Karthik said,
September 30, 2006 at 1:01 pm
இந்த முறை போட்டி முடிவுகள் மிகவும் அதிருப்தியே தருகின்றது. நல்ல கதைகள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்க, சுமாரான கதைகள் முன்னே வந்து இருக்கிறது. தேன்கூடு கவனிக்க வேண்டும். இந்தப் போட்டி அரசியலாகிக் கொண்டு இருக்கிறது. நடுவர் குழுவிலும் கடைசி நடுவரே, நடுநிலையோடு வாக்களித்திருப்பதுபோல் தோன்றுகிறது. என்னமோ நடத்துங்க.
rishi_sethu said,
September 30, 2006 at 8:30 pm
all the best for all the winners
ராம்குமார்@அமுதன் said,
October 1, 2006 at 1:37 pm
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். என்னுடைய கண்டிப்பாடா செல்லம் கதைக்கும் சர்தார்ஜி ஜோக்கிற்கும் ஓட்டுப் போட்ட 30 நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி…..
ராம்குமார்@அமுதன்