10.02.06

போட்டி-ஆலோசனை: வாக்காளர்கள்!?

Posted in அறிவிப்புகள், போட்டி at 1:36 pm by Thenkoodu Support

பதிவர் ‘வலைஞன்‘ - மிக முக்கியமான ஒரு ஆலோசனையை முன் வைத்திருக்கிறார். இதே ஆலோசனையைத்தான் நாங்களும் யோசித்துக்கொண்டிருந்தோம் என்பதால், இந்த இடுகை முக்கியமானதாகுகிறது.

…வலைப்பதிவுகளுக்கு தொடர்பேயில்லாத படைப்பாளர்களின் நண்பர்கள் வாக்களிப்பில் மட்டும் கலந்து கொண்டு வாக்களிப்பது என்பது சில நேரங்களில் நேர்மையற்ற முடிவுகளைத் தர வாய்ப்புண்டு.

மேலும் ஐபி தடை போன்ற தொழில் நுட்ப விவகாரங்கள் எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதும் கேள்விக்குறியே. அதில் பல்வேறு பிரச்சினைகளும் உள்ளன.

இதற்கு மாற்றாக குறைந்த பட்சம் ஒரு இயங்கும் வலைப்பதிவைச் சொந்தமாகக் கொண்ட வலைப்பதிவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதித்தால் தொடர்பற்ற பிற நபர்கள் வாக்களிப்பதை தவிர்க்க முடியும்.

1) ஐ.பி. , குக்கி போன்ற முறைகளும் இணையத்தினரின் கள்ள ஓட்டிடும் வாய்ப்பினை ஓரளவிற்குத்தான் தடை செய்யப்போகிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

2) வலைப்பதிவிற்கு சம்பந்தமில்லாத, நண்பர்கள், உறவினர்கள், ஒரே ஒரு முறை வந்து ரிஜிஸ்டர் செய்து வாக்கெடுப்பில் கலந்து கொள்வது என்பது, வலைப்பதிவுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சியாக இருக்குமே ஒழிய, போட்டியின் முழுமையை உணரச்செய்யாமல் போய்விடும் வாய்ப்பிருக்கிறது.

3) போட்டியின் நம்பகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, வலைப்பதிவர்கள் மட்டுமே போட்டியின் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையை வரவேற்கிறோம்.

இந்த ஆலோசனை குறித்த உங்களது கருத்துகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் ஒவ்வொருவருடைய கருத்துக்களும் மிக முக்கியம்! இதன் படி, இந்த வழிமுறை நவம்பர் மாதத்திலிருந்து (அல்லது இந்த மாதத்திலிருந்தே கூட) நடைமுறைக்கு வரும்.

இதன் மூலம், பல புதிய வலைப்பதிவுகள் உருவாகும்; தொடர்ந்து எழுதப்படும் என்றாலும் மகிழ்ச்சிக்குரிய விடயம்தானே! :-)

பி.கு: தமிழ் வலைப்பதிவுகளின் வாசகர்களில் பெரும்பாலானோர் வலைப்பதிவர்கள்.

இதுவரை போட்டி குறித்து பதிவிட்டவர்கள்:
(எங்கள் கவனத்திற்கு வந்தவை மட்டும்…)

தேன்கூடு போட்டி - சில யோசனைகள் - மனதின் ஓசை

தேன்கூடு நிர்வாகிகளுக்கு சில யோசனைகள் - சந்தோஷ்

தேன்கூடு போட்டி விவாதங்கள்! - வலைஞன்

தேன்கூடு போட்டி விவாதங்கள் தொடர்ச்சி… - வலைஞன்

2 Comments »

  1. நடராஜன் ஸ்ரீனிவாசன் said,

    October 2, 2006 at 3:42 pm

    //வலைப்பதிவர்கள் மட்டுமே போட்டியின் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆலோசனை//

    இது நல்ல யோசனையாகத் தெரிகிறது.

  2. வசந்த் said,

    October 3, 2006 at 6:09 pm

    தயவு செய்து பதிவைப் பார்க்கவும்.

Leave a Comment