10.31.06
அக்டோபர் ‘06 போட்டி முடிவுகள்
அக்டோபர் 2006 வலைப்பதிவுப் போட்டி முடிவுகள்
அக்டோபர் மாதத்தின் தேன்கூடு-தமிழோவியம் போட்டியின் வெற்றிக்கு துணை நின்ற வலைப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி.
போட்டியில் பங்கெடுத்துக்கொண்டு ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் எழுதிய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியில் வெற்றி பெற்ற வலைப்பதிவர்களுக்கு எங்களின் சிறப்புப் பாராட்டுகள்.
பின்னூட்டங்கள் மூலமாகவும், வாக்குப் பதிவில் கலந்து கொண்டு வாக்களித்தும் பதிவர்களை உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் எங்களின் நன்றிகள்.
போட்டி முடிவுகள்:
முதல் பரிசு -
அப்பாவி அடிமைகளுக்கு - luckylook
இரண்டாவது பரிசு -
விடுதலை - gragavan
மூன்றாவது பரிசு -
விட்டு விடுதலையாகி… - சுதர்சன்.கோபால்
நான்காவது இடத்தில் -
ஓர் இரவில்….தீபாவை மீட்க - kadalganesan
தேன்கூடு-தமிழோவியம் மாதாந்திரப் போட்டிகள் வலைப்பதிவுகளின் சாத்தியக்கூறுகளையும், வலைப்பதிவர்களின் எல்லையற்ற திறமையையும் அவர்கள் பாணியிலேயே சுலபமாக சுவாரசியமாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு பயிற்சிக்களம் என்பது நீங்கள் அறிந்ததே. எழுத்துத்திறனையும் நல்ல எழுத்துக்களையும் உற்சாகப்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் வெற்றி தோல்வியை விட பங்கேற்பு என்பதே திறமையை நிரூபிக்கும் முயற்சி. அந்த விதத்தில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களையும் பாராட்டுவதில் மகிழ்கிறோம்.
பிறந்த குழந்தை உடனடியாக எழுந்து ஓட முடியுமா? :-) மாதந்தோறும் ஏற்படும் அவசியமான மாறுதல்கள், தவிர்க்க இயலாதவை; ரசிக்கத்தக்கவை! ஒவ்வொரு மாதமும் போட்டியின் சரியான பாதைக்காக வாசகர்களும் வலைப்பதிவர்களும் தரும் ஆலோசனைகளுக்கு நிச்சயம் நாங்கள் நன்றி சொல்லத்தான் வேண்டும். போட்டியின் இந்த மாதத்திலும் ஒரு சிறப்பு மாறுதல் - வலைப்பதிவர் மற்றும் வாசகர் தேர்வுகள் பிரித்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, இந்த மாதப் போட்டியின் முடிவுகள் வலைப்பதிவர் வாக்கெடுப்பு(50%) , வாசகர் வாக்கெடுப்பு(20%), நடுவர் குழுவின் கருத்து(30%) ஆகியவற்றின் துணையுடன் முடிவு செய்யப் பட்டிருக்கிறது.
போட்டியில் நடுவர்களாகச் செயல்பட இசைந்த ஆசாத், அருணா சீனிவாசன், பவித்ரா சீனிவாசன் ஆகியோருக்கு எங்களின் நன்றிகள். நடுவர்களின் கணிப்பு மற்றும் போட்டியின் முடிவுகள் குறித்த புள்ளி விபரங்கள் கீழே பெட்டிகளில் காணலாம். ( போட்டியில் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10 ஆக்கங்கள் மட்டுமே, பெயர்,வாக்கெடுப்பு விபரங்கள் தெரிவிக்கப்படாமல் நடுவர்களுக்கு அனுப்பப்பட்டது. பதிவர்கள் பங்களிப்பு, நடுவர்கள் நேரம் பொறுத்து, அடுத்தடுத்த மாதங்களில் இந்த எண்ணிக்கை உயர்த்தப்படலாம்.)
‘விடுதலை’ - தலைப்பினைக் கொடுத்ததுடன் மட்டுமல்லாது , அன்புடன் எங்களுடன் ஒத்துழைத்ததற்கும், போட்டி முடிவில் நடுவர்குழுவில் பங்கேற்று மதிப்பிட்டமைக்கும், இந்தப் போட்டிகளின் தொடர்ச்சிக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தமைக்கும் திரு. ஆசாத் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். விடுமுறை காலத்தில் தொடர்பு கொள்ள நேர்ந்த தொந்தரவினைக் கூடப் பெரிதுபடுத்தாமல், போட்டிக்காக நேரம் ஒதுக்கி ஒத்துழைப்பு நல்கிய திரு.ஆசாத், எங்கள் நினைவில் என்றும் இருப்பார்; நன்றி ஆசாத்!
தேன்கூடு - தமிழோவியம் வலைப்பதிவுப் போட்டிகளின் அடுத்தடுத்த மாதங்களின் போட்டிகளிலும் வாக்கெடுப்புகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பதிவர்களை உற்சாகப்படுத்துமாறு வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி, வணக்கம்.
வலைப்பதிவர்களின் மதிப்பீடுகள்:
| 100% | 50% | ||
|---|---|---|---|
| 1 | தேன்கூடு போட்டி: விடுதலை - சிறுகதை - gragavan | 37.5% | 18.75 |
| 2 | அப்பாவி அடிமைகளுக்கு - luckylook | 34.4% | 17.2 |
| 3 | ஓர் இரவில்….தீபாவை மீட்க (தேன்கூடு போட்டிக்காக) - kadalganesan | 28.1% | 14.05 |
| 4 | விட்டு விடுதலையாகி… - தேன்கூடு போட்டிக்கு - சுதர்சன்.கோபால் | 28.1% | 14.05 |
| 5 | விடுதலை - சிறில் அலெக்ஸ் | 25% | 12.5 |
| 6 | உள்ளாட்சித் தேர்தல் 2006 - கார்ட்டூன் - சோம்பேறி பையன் | 25% | 12.5 |
| 7 | நில், கவனி, யோசி.. - சிறுகதை - சோம்பேறி பையன் | 25% | 12.5 |
| 8 | நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!( தேன்கூடு போட்டிக்கு) - ஷைலஜா | 25% | 12.5 |
| 9 | வேலிகளால் கிடைக்குமா விடுதலை? - ராசுக்குட்டி | 25% | 12.5 |
| 10 | சூக்கும வழி - ஓகை | 18.8% | 9.4 |
வாசகர்களின் மதிப்பீடுகள்:
| 100% | 20% | ||
|---|---|---|---|
| 1 | தேன்கூடு போட்டி: விடுதலை - சிறுகதை - gragavan | 8.3% | 1.66 |
| 2 | அப்பாவி அடிமைகளுக்கு - luckylook | 20.8% | 4.16 |
| 3 | ஓர் இரவில்….தீபாவை மீட்க (தேன்கூடு போட்டிக்காக) - kadalganesan | 12.5% | 2.5 |
| 4 | விட்டு விடுதலையாகி… - தேன்கூடு போட்டிக்கு - சுதர்சன்.கோபால் | 16.7% | 3.34 |
| 5 | விடுதலை - சிறில் அலெக்ஸ் | 8.3% | 1.66 |
| 6 | உள்ளாட்சித் தேர்தல் 2006 - கார்ட்டூன் - சோம்பேறி பையன் | 8.3% | 1.66 |
| 7 | நில், கவனி, யோசி.. - சிறுகதை - சோம்பேறி பையன் | 8.3% | 1.66 |
| 8 | நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!( தேன்கூடு போட்டிக்கு) - ஷைலஜா | 8.3% | 1.66 |
| 9 | வேலிகளால் கிடைக்குமா விடுதலை? - ராசுக்குட்டி | 12.5% | 2.5 |
| 10 | சூக்கும வழி - ஓகை | 4.2% | 0.84 |
இந்த மாதம் நடந்த ஓட்டெடுப்பின் முழுமையான விபரங்களை காண: வலைப்பதிவர் மதிப்பீடுகள், வாசகர் மதிப்பீடுகள்.
நடுவர் குழுவின் மதிப்பீடுகள்:
| 100% | 10% | 10% | 10% | ||||
|---|---|---|---|---|---|---|---|
| 1 | தேன்கூடு போட்டி: விடுதலை - சிறுகதை - gragavan | 75 | 7.5 | 70 | 7 | 38 | 3.8 |
| 2 | அப்பாவி அடிமைகளுக்கு - luckylook | 81 | 8.1 | 84 | 8.4 | 40 | 4 |
| 3 | ஓர் இரவில்….தீபாவை மீட்க (தேன்கூடு போட்டிக்காக) - kadalganesan | 71 | 7.1 | 85 | 8.5 | 41 | 4.1 |
| 4 | விட்டு விடுதலையாகி… - தேன்கூடு போட்டிக்கு - சுதர்சன்.கோபால் | 85 | 8.5 | 80 | 8.0 | 45 | 4.5 |
| 5 | விடுதலை - சிறில் அலெக்ஸ் | 61 | 6.1 | 72 | 7.2 | 35 | 3.5 |
| 6 | உள்ளாட்சித் தேர்தல் 2006 - கார்ட்டூன் - சோம்பேறி பையன் | 65 | 6.5 | 95 | 9.5 | 45 | 4.5 |
| 7 | நில், கவனி, யோசி.. - சிறுகதை - சோம்பேறி பையன் | 70 | 7 | 78 | 7.8 | 25 | 2.5 |
| 8 | நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!( தேன்கூடு போட்டிக்கு) - ஷைலஜா | 80 | 8 | 75 | 7.5 | 40 | 4 |
| 9 | வேலிகளால் கிடைக்குமா விடுதலை? - ராசுக்குட்டி | 66 | 6.6 | 88 | 8.8 | 35 | 3.5 |
| 10 | சூக்கும வழி - ஓகை | 86 | 8.6 | 90 | 9.0 | 48 | 4.8 |
இறுதி முடிவுகள்:
| 2 | அப்பாவி அடிமைகளுக்கு - luckylook | 41.86% |
| 1 | தேன்கூடு போட்டி: விடுதலை - சிறுகதை - gragavan | 38.71% |
| 4 | விட்டு விடுதலையாகி… - தேன்கூடு போட்டிக்கு - சுதர்சன்.கோபால் | 37.54% |
| 3 | ஓர் இரவில்….தீபாவை மீட்க (தேன்கூடு போட்டிக்காக) - kadalganesan | 36.25% |
| 6 | உள்ளாட்சித் தேர்தல் 2006 - கார்ட்டூன் - சோம்பேறி பையன் | 34.66% |
| 9 | வேலிகளால் கிடைக்குமா விடுதலை? - ராசுக்குட்டி | 33.9% |
| 8 | நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!( தேன்கூடு போட்டிக்கு) - ஷைலஜா | 33.66% |
| 10 | சூக்கும வழி - ஓகை | 32.64% |
| 7 | நில், கவனி, யோசி.. - சிறுகதை - சோம்பேறி பையன் | 31.46% |
| 5 | விடுதலை - சிறில் அலெக்ஸ் | 30.96% |

நடராஜன் ஸ்ரீனிவாசன் said,
October 31, 2006 at 8:31 am
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
muthu(tamizhini) said,
October 31, 2006 at 8:41 am
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
லக்கிக்கு என் ஸ்பெசல் வாழ்த்துக்கள்
Rajalukshmi said,
October 31, 2006 at 10:15 am
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்….
Congrats for winnin :-)
luckylook said,
October 31, 2006 at 10:17 am
வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், போட்டி அமைப்பாளர்களுக்கும் நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
மணியன் said,
October 31, 2006 at 11:47 am
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள் !!
நெல்லை சிவா said,
October 31, 2006 at 12:52 pm
வெற்றி பெற்ற அக்டோபர் மாத படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்!
போட்டியில் கலந்துகொண்டு படைப்புகளை கொடுத்த சக படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள். விடாமுயற்சியுடன், மீண்டும் தெம்புடன் அடுத்த மாதப்போட்டிக்கு ஆயத்தமாக அழைப்பும் உரியதாகட்டும்.
வாக்களித்த அனைத்து வலைப்பதிவர்களுக்கும், வலையில்லா வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அப்பாவி அடிமைகளுக்கு விடுதலை கொடுத்த, லக்கிலுக் கலாய்க்க ஏதுவாக ஜாலியான தலைப்பாக கொடுப்பாராக! :)
திறனுடன் மேம்படுத்திய தேன்கூட்டிற்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
RamKunar Amuthan said,
October 31, 2006 at 3:02 pm
போட்டியில் வெற்றி பெற்ற ராகவன் ஜி, லக்கி லுக், சுதர்சன் கோபால் ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்….. என்னுடைய கதைக்கு வாக்களித்த் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றி நன்றி நன்றி…….
RamKunar Amuthan said,
October 31, 2006 at 3:05 pm
லக்கி லுக் அவர்களே நெல்லை சிவா கேட்டிருப்பதைப் போல எழுதுவதற்கு தோதாக நல்ல தலைப்பு கொடுப்பீர்களாக…….
சுதர்சன்.கோபால் said,
October 31, 2006 at 4:21 pm
சக வலைபதிவர்களுக்கும்,வாசகர்களுக்கும்,போட்டி அமைப்பாளர்களுக்கும் நன்றி.
ராஜன் said,
October 31, 2006 at 6:28 pm
மனமார்ந்த வாழ்த்துக்கள் லக்கி…!
வல்லிசிம்ஹன் said,
October 31, 2006 at 7:26 pm
வெற்றி பெற்ற லக்கிலுக், ஜி.ரா, சுதர்சன் கோபால்
மற்றூம்
அதிர்ஷ்டப் பத்து வரிசையில் அமர்ந்த
அனைவருக்கும்
வாழ்த்துகள்.
பா. முரளி தரன் said,
October 31, 2006 at 10:24 pm
வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கும், பங்கு கொண்ட படைப்பாளிகளுக்கும், வாக்காளர்களுக்கும், நடுவர்களுக்கும்,நிர்வாகிகளுக்கும்,
வாசகர்களுக்கும் வாழ்த்துக்கள்/ நன்றிகள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.
ஜி.கௌதம் said,
November 1, 2006 at 3:55 pm
வெற்றி பெற்றவர்களுக்கும் (அடுத்த முறை) பெறப்போவதற்காக இந்த முறை விட்டுக் கொடுத்தவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
மா.கலை அரசன் said,
November 1, 2006 at 10:29 pm
வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
srishiv said,
November 16, 2006 at 12:36 pm
அன்பான தேன்கூடு,
தங்கள் கதையை தேர்வு செய்யும் முறையை சற்று மாற்றி அமைத்தால் நன்று, பெரும்பாலும், கொஞசம் புகழடைந்த எழுத்தாளர்கள் அவர்களுக்கென்று ஒரு வாசகர் வட்டம் வைத்திருப்பார்கள், உதாரணத்திற்கு, நானே அனைத்து வலைப்பூக்களையும் பார்ப்பதில்லை, வெகுசிலவற்றையே பார்ப்பதுண்டு, டி.பி.ஆர்.ஜோசப் ஐயா, துளசி அம்மா, இப்படி தேர்ந்தெடுத்து படிக்கும் நான், சில , பல நல்ல கதைகளையே தவறவிடுவதுண்டு, எனவே கதையின் தரத்தினை நடுவர்களும்தேர்வு செய்யட்டும், அனுப்பப்படும் அனைத்து கதைகளையும் நடுவர்களுக்கு அனுப்பலாமே? என் ஆலோசனை இது…வணக்கம்
ஸ்ரீஷிவ்,..
Thenkoodu Support said,
November 16, 2006 at 12:55 pm
உங்கள் அன்பான ஆலோசனைக்கு நன்றி ஸ்ரீஷிவ்.
இதற்கான தீர்வினை விரைவில் முன் வைக்க இருக்கிறோம்.
அன்புடன்,
நண்பர்கள் குழு.