11.28.06
நவம்பர் ‘06 போட்டி முடிவுகள்
நவம்பர் 2006 வலைப்பதிவுப் போட்டி முடிவுகள்
நவம்பர் மாதத்தின் தேன்கூடு-தமிழோவியம் போட்டியின் வெற்றிக்கு துணை நின்ற வலைப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி.
போட்டியில் பங்கெடுத்துக்கொண்டு ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் எழுதிய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியில் வெற்றி பெற்ற வலைப்பதிவர்களுக்கு எங்களின் சிறப்புப் பாராட்டுகள்.
பின்னூட்டங்கள் மூலமாகவும், வாக்குப் பதிவில் கலந்து கொண்டு வாக்களித்தும் பதிவர்களை உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் எங்களின் நன்றிகள்.
போட்டி முடிவுகள்:
முதல் பரிசு -
சொர்க்கம் இலவசம்- சிறில் அலெக்ஸ்
இரண்டாவது பரிசு -
இலவசம்? - பினாத்தல் சுரேஷ்
மூன்றாவது பரிசு -
இலவசமாய்! - நாமக்கல் சிபி
நான்காவது இடத்தில் -
ஒன்றா இரண்டா இலவசம்? - ஷைலஜா
தேன்கூடு-தமிழோவியம் மாதாந்திரப் போட்டிகள் வலைப்பதிவுகளின் சாத்தியக்கூறுகளையும், வலைப்பதிவர்களின் எல்லையற்ற திறமையையும் அவர்கள் பாணியிலேயே சுலபமாக சுவாரசியமாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு பயிற்சிக்களம் என்பது நீங்கள் அறிந்ததே. எழுத்துத்திறனையும் நல்ல எழுத்துக்களையும் உற்சாகப்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் வெற்றி தோல்வியை விட பங்கேற்பு என்பதே திறமையை நிரூபிக்கும் முயற்சி. அந்த விதத்தில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களையும் பாராட்டுவதில் மகிழ்கிறோம்.
போட்டியில் நடுவர்களாகச் செயல்பட இசைந்த லக்கிலுக், ஆசிப் மீரான், பத்மா அர்விந்த்ஆகியோருக்கு எங்களின் நன்றிகள். நடுவர்களின் கணிப்பு மற்றும் போட்டியின் முடிவுகள் குறித்த புள்ளி விபரங்கள் கீழே பெட்டிகளில் காணலாம். ( போட்டியில் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10 ஆக்கங்கள் மட்டுமே, வாக்கெடுப்பு விபரங்கள் தெரிவிக்கப்படாமல் நடுவர்களுக்கு அனுப்பப்பட்டது. )
‘இலவசம்’ - தலைப்பினைக் கொடுத்ததுடன் மட்டுமல்லாது , அன்புடன் எங்களுடன் ஒத்துழைத்ததற்கும், போட்டி முடிவில் நடுவர்குழுவில் பங்கேற்று மதிப்பிட்டமைக்கும், இந்தப் போட்டிகளின் தொடர்ச்சிக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தமைக்கும் திரு. லக்கிலுக் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் வாய்ப்பினை சிறப்பாகப் பயன்படுத்தி, தமிழின் வளர்ச்சிக்கு தேன்கூடு நண்பர்களின் முயற்சிக்கு துணை நின்ற இனிய நண்பர்கள் எங்களின் அன்பு வலைப்பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தி!
தேன்கூட்டின் ஓராண்டு நிறைவினைக் கொண்டாடும் விதமாக அடுத்த மாதப் போட்டி, டிசம்பர் போட்டியினை மெகா போட்டியாக நடத்த முடிவெடுத்திருக்கிறோம். போட்டியில் பங்கேற்பவர்களுக்கு (வோட்டு போடுபவர்கள் உட்பட) அதிரடி பரிசுகள் காத்திருக்கின்றன. அது மட்டுமல்லாது டிசம்பர் மாதப் போட்டியே தேன்கூடு தமிழோவியம் தொடர் போட்டிகளின் கடைசிப் போட்டி என்பதனையும் அறியத்தருகிறோம்.
போட்டியின் பரிசுத் தொகைகளிலும் மாற்றங்கள் உண்டு. விபரங்கள் டிசம்பர் 1 ல்.
தேன்கூடு-தமிழோவியம் டிசம்பர் மாதப் போட்டியிலும் வாக்கெடுப்பிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பதிவர்களை உற்சாகப்படுத்துமாறு வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் நட்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி, வணக்கம்.
வலைப்பதிவர்களின் மதிப்பீடுகள்:
| 100% | 50% | ||
|---|---|---|---|
| 1 | என்னாது… இலவசம்.. இல்லையா? - வெட்டிப்பயல் | 31.1% | 15.55 |
| 2 | இலவசமாய்! - நாமக்கல் சிபி | 26.7% | 13.35 |
| 3 | சொர்க்கம் இலவசம் - சிறில் அலெக்ஸ் | 26.7% | 13.35 |
| 4 | காதல் வாங்கினால் முத்தம் இலவசம்! - அருட்பெருங்கோ | 24.4% | 12.2 |
| 5 | இரயில் வண்டியில் ஒரு ஹஜ் பயணம் (இலவசமாய்) - madhumitha | 22.2% | 11.1 |
| 6 | இலவசம்? - பினாத்தல் சுரேஷ் | 22.2% | 11.1 |
| 7 | ஒன்றா இரண்டா இலவசம்? - ஷைலஜா | 20% | 10 |
| 8 | இனியெல்லாம் இலவசமே… - செந்தழல் ரவி | 20% | 10 |
| 9 | இலவசம் மனக்கசப்பே! - sk | 15.6% | 7.8 |
| 10 | ட்டுர்ர்ர்ர்ர்… - தியாகராஜன். ரெ | 15.6% | 7.8 |
வாசகர்களின் மதிப்பீடுகள்:
| 100% | 20% | ||
|---|---|---|---|
| 1 | என்னாது… இலவசம்.. இல்லையா? - வெட்டிப்பயல் | 3.2% | 0.64 |
| 2 | இலவசமாய்! - நாமக்கல் சிபி | 6.5% | 1.3 |
| 3 | சொர்க்கம் இலவசம் - சிறில் அலெக்ஸ் | 19.4% | 3.88 |
| 4 | காதல் வாங்கினால் முத்தம் இலவசம்! - அருட்பெருங்கோ | 3.2% | 0.64 |
| 5 | இரயில் வண்டியில் ஒரு ஹஜ் பயணம் (இலவசமாய்) - madhumitha | 12.9% | 2.58 |
| 6 | இலவசம்? - பினாத்தல் சுரேஷ் | 3.2% | 0.64 |
| 7 | ஒன்றா இரண்டா இலவசம்? - ஷைலஜா | 9.7% | 1.94 |
| 8 | இனியெல்லாம் இலவசமே… - செந்தழல் ரவி | 12.9% | 2.58 |
| 9 | இலவசம் மனக்கசப்பே! - sk | 3.2% | 0.64 |
| 10 | ட்டுர்ர்ர்ர்ர்… - தியாகராஜன். ரெ | 6.5% | 1.3 |
இந்த மாதம் நடந்த ஓட்டெடுப்பின் முழுமையான விபரங்களை காண: வலைப்பதிவர் மதிப்பீடுகள், வாசகர் மதிப்பீடுகள்.
நடுவர் குழுவின் மதிப்பீடுகள்:
| 100% | 10% | 10% | 10% | ||||
|---|---|---|---|---|---|---|---|
| 1 | என்னாது… இலவசம்.. இல்லையா? - வெட்டிப்பயல் | 60 | 6 | 75 | 7.5 | 20 | 2 |
| 2 | இலவசமாய்! - நாமக்கல் சிபி | 85 | 8.5 | 50 | 5 | 50 | 5 |
| 3 | சொர்க்கம் இலவசம் - சிறில் அலெக்ஸ் | 65 | 6.5 | 65 | 6.5 | 73 | 7.3 |
| 4 | காதல் வாங்கினால் முத்தம் இலவசம்! - அருட்பெருங்கோ | 80 | 8 | 50 | 5.0 | 5.5 | 5.5 |
| 5 | இரயில் வண்டியில் ஒரு ஹஜ் பயணம் (இலவசமாய்) - madhumitha | 70 | 7 | 60 | 6 | 40 | 4 |
| 6 | இலவசம்? - பினாத்தல் சுரேஷ் | 80 | 8 | 70 | 7 | 70 | 7 |
| 7 | ஒன்றா இரண்டா இலவசம்? - ஷைலஜா | 90 | 9 | 55 | 5.5 | 60 | 6 |
| 8 | இனியெல்லாம் இலவசமே… - செந்தழல் ரவி | 85 | 8.5 | 50 | 5 | 35 | 3.5 |
| 9 | இலவசம் மனக்கசப்பே! - sk | 50 | 5 | 50 | 5 | 15 | 1.5 |
| 10 | ட்டுர்ர்ர்ர்ர்… - தியாகராஜன். ரெ | 70 | 7 | 50 | 5.0 | 35 | 3.5 |
இறுதி முடிவுகள்:
| 3 | சொர்க்கம் இலவசம் - சிறில் அலெக்ஸ் | 37.53% |
| 6 | இலவசம்? - பெனாத்தல் சுரேஷ் | 33.74% |
| 2 | இலவசமாய் - நாமக்கல் சிபி | 33.15% |
| 5 | ஒன்றா இரண்டா இலவசம்? - ஷைலஜா | 32.44% |
| 1 | என்னாது இலவசம் இல்லையா? - வெட்டிப்பயல் | 31.69% |
| 8 | காதல் வாங்கினால் முத்தம் இலவசம் - அருட்பெருங்கோ | 31.34% |
| 4 | இரயில் வண்டியில் ஒரு ஹஜ் பயணம் இலவசமாய் - மதுமிதா | 30.68% |
| 7 | இனியெல்லாம் இலவசமே - செந்தழல் ரவி | 29.58% |
| 10 | ட்டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் - தியாகராஜன் | 24.6% |
| 6 | இலவசம் மனக்கசப்பே - எஸ்கே | 19.74% |
நடுவர் பத்மா அரவிந்த் அவர்களின் கருத்துக்கள்:
அவ்வளவு சிறப்பானதாக பெரும்பான்மையான ஆக்கங்கள் படவில்லை. மதுமிதாவின் ஆக்கம் ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் போக போக ஒரு பயணக்குறிப்பாக மாறிவிட்டது.
எஸ்கே, வெட்டிப்பயல் இருவரும் கட்டுரையாகவோ இல்லை கதை என்ற கோணமாக எழுதாதாவாறு தோன்றியது. இன்னும் அழுத்தமாக எழுதி இருக்கலாம்.வெட்டிப்பயல் இன்னும் கொஞ்சம் எழுத்துப்பிழைகளை கவனித்திருந்திருக்கலாம்.
நாமக்கல் சிபி, ஷைலஜா மற்றும் அருட்பெருங்கோ மூவருமே அருமையாக எழுதி இருந்தாலும் ஷைலஜாவின் கவிதையில் ஒருவித இனிமையும் இருந்ததாகப் பட்டது.
சுரேஷின் கதையும் சிறில் அலெக்ஸின் கதையும் நடையில் வடிவமைப்பில் அருமையாக இருந்த போதும், அலெக்ஸின் நடையும் நகைச்சுவையும் அழுத்தமான கதைக்கருவும் முதற்பரிசுக்கான தகுதி உடையது என்று கருதுகிறேன்.
நடுவர் குழுவில் பங்கேற்று ஆர்வமுடன் ஒத்துழைப்பு நல்கிய நண்பர் திரு. ஆசிப் மீரான், அவரது கருத்துக்களை தனிப்பதிவாக எழுத எண்ணம் கொண்டிருக்கிறார். அவருக்கு எங்களின் நன்றிகள்.
Update: http://asifmeeran.blogspot.com/2006/11/blog-post_28.html

அருண் குமார் said,
November 28, 2006 at 7:56 am
வாசகர் பதிவின் படி, இவையே முதல் பத்து ஆக்கங்கள். ஆனால், இவைகளில் சிலவே நடுவர் குழுவுக்கு அனுப்பப் பட்டிருக்கிறது. ஏதேனும், விதியில் மாற்றமா? விளக்கவும்.
1. படித்ததில் பிடித்த ஆக்கங்களைத் தேர்ந்தெடுக்க
55 : இலவசங்களின் விலை! - தேன்கூடு போட்டிக்கு - ராசுக்குட்டி 41.9%
வலைப்பூ…தலைப்பூ…வாழப்பூ - நெல்லை சிவா 25.8%
சொர்க்கம் இலவசம் - சிறில் அலெக்ஸ் 19.4%
இலவசம்..சில கனவுகள்..சில நினைவுகள்.. - நெல்லை சிவா 16.1%
இரயில் வண்டியில் ஒரு ஹஜ் பயணம் (இலவசமாய்) - madhumitha 12.9%
இனியெல்லாம் இலவசமே… - செந்தழல் ரவி 12.9%
குறையொன்று உண்டு(தேன்கூடு போட்டிக்கவிதை) - ஷைலஜா 9.7%
ஒன்றா இரண்டா இலவசம்? - ஷைலஜா 9.7%
லாட்டரி கோவிந்தன் ( தேன்கூடு போட்டிக்கு ) - badnewsindia 9.7%
அருள் இலவசமே! - ஷைலஜா 9.7%
ஓகை said,
November 28, 2006 at 9:15 am
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Thenkoodu Support said,
November 28, 2006 at 1:41 pm
//வாசகர் பதிவின் படி, இவையே முதல் பத்து ஆக்கங்கள். ஆனால், இவைகளில் சிலவே நடுவர் குழுவுக்கு அனுப்பப் பட்டிருக்கிறது. ஏதேனும், விதியில் மாற்றமா? விளக்கவும்.
//
வலைப்பதிவர்களின் தேர்வினையே முக்கியமானதாக எடுத்துக்கொண்டிருக்கிறோம்.
sk said,
November 28, 2006 at 7:13 pm
முதல் பத்து இடங்களில் ஒன்றாக என் படைப்பத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி கூறி, வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அருண் குமார் said,
November 28, 2006 at 9:08 pm
//வாசகர் பதிவின் படி, இவையே முதல் பத்து ஆக்கங்கள். ஆனால், இவைகளில் சிலவே நடுவர் குழுவுக்கு அனுப்பப் பட்டிருக்கிறது. ஏதேனும், விதியில் மாற்றமா? விளக்கவும்.
//
வலைப்பதிவர்களின் தேர்வினையே முக்கியமானதாக எடுத்துக்கொண்டிருக்கிறோம்.
அப்படியானால், நீங்கள் உங்கள் தளத்தில் சொல்லியிருப்பதை, ‘வாசகர்’ என்பதற்கு பதிலாய், ‘வலைப்பதிவர்’ என மாற்ற வேண்டும்.
வாசகர் மதீப்பீடுகளுக்கும், வலைப்பதிவர் மதிப்பீடுகளுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பது போல் தோன்றுகிறது.
வலைஞர்களின் வாக்குகள், நட்பு அடிப்படையிலேயே தீர்மானிக்கப் பட்டு இருப்பது போல் தோன்றுகிறது, சிறந்த சில சிறுகதைகள், அவர்கள் வாக்குகளைப் பெறாமையே இதற்கு சான்று.
- இருவர் கருத்துக்கும், சம வாய்ப்பு கொடுக்கப் பட்டிருக்க வேண்டும்,
- நடுவர் குழு அனைத்து கதைகளையும் படித்து அவர்கள் மதிப்பீடும் சேர்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவை இரண்டுமில்லாமல், இந்த போட்டி ஒரு நடுநிலையான முடிவுகளைத்தரும் என்று தோன்றவில்லை.
நல்ல சில கதைகள், வலைஞர்களின் பாப்புலாரிட்டியினால், காணாமல் போய்விடுகிறது.
ஒரு குழு மனப்பான்மையையே இது தோற்றுவிக்க உதவும். அடுத்த போட்டி கடைசி போட்டி என்கிறீர்கள், அதுவாவது சரியாய்ச் செய்தால், நன்று.
ஜி.கௌதம் said,
November 28, 2006 at 9:10 pm
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்கள்.
வெற்றி பெறாமல் போனவர்களுக்கும் தூரம் அதிகமில்லை என்பதற்கான உற்சாக வாழ்த்துக்கள்.
வெட்டிப்பயல் said,
November 29, 2006 at 2:25 am
அருண் குமார்,
இரண்டு மாசத்துக்கு முன்னாடி போட்டில என்னாச்சுனு கொஞ்சம் போய் பாருங்க உங்களுக்கு தானா புரியும்.
நடுவர்கள் எல்லா கதையும் படிப்பது அவ்வளவு சாத்தியமில்லை. நல்லா எழுதிருக்கவங்களை நல்லா எழுதியிருக்கீங்கனு பின்னூட்டத்துல பாராட்டினாலே போதும் அருண்.
நீங்க எத்தனை பதிவ படிச்சு அவுங்களை பாராட்டினீங்கனு பாருங்க… ஜெயிக்கலைனாலும் ்பராவாயில்லை உங்களுடையது வெற்றிக்கு தகுதியானதேனு மனமார பாராட்டுங்கள். அந்த படைப்பாளிக்கு அதுவே போதும்!!!
//இருவர் கருத்துக்கும், சம வாய்ப்பு கொடுக்கப் பட்டிருக்க வேண்டும்,//
இது போன மாதம் தான் மாற்றப்பட்டது. வேண்டுமென்றால் செப்டம்பர் மாதம் நடந்த போட்டியில் எழுந்த பிரச்சனைகளை பாருங்கள்.
//நடுவர் குழு அனைத்து கதைகளையும் படித்து அவர்கள் மதிப்பீடும் சேர்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.//
இதுவும் எந்த அளவுக்கு சாத்திய்யமென்று தெரியவில்லை… அனைத்து கதைகளையும் படிப்பது என்பது முழுநேரம் இந்த தொழிலில் ஈடுபடாதவர்களால் முடியுமென்று படவில்லை.
என்னுடைய கருத்து என்னவென்றால் வலைப்பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் 50% கொடுத்து பிறகு நடுவர்களிடம்் (வலைப்பதிவில் ஈடுபடாதவர்களாக இருந்தால் சிறந்தது) முதல் 10க்கு பதில் 15 - 20 கொடுக்கலாம். இதுவும் அவர்களின் நேரத்தை பொருத்தே!!!
மீதி 50% அவர்களின் எண்ணத்தை பொருத்தே!!!
அருண் குமார் said,
November 29, 2006 at 7:20 am
அன்பு வெ.ப. (இப்படி கூப்பிட சற்று கஷ்டமா இருக்கு),
அனைத்துப் படைப்புகளையும் நடுவர்களால், படிக்கப் பட இயலாது என்பது ஒரு காரணமாக இருக்கும் பட்சத்தில், வாசகர்களால் தேர்ந்தெடுக்கப் படக்கூடிய 10ம், வலைப்பதிவர்களால் தேர்ந்தெடுக்கப் படக்கூடிய 10ம் நடுவர் குழு பரிசீலிக்குமென்றால் நன்று.
//நீங்க எத்தனை பதிவ படிச்சு அவுங்களை பாராட்டினீங்கனு பாருங்க… ஜெயிக்கலைனாலும் ்பராவாயில்லை உங்களுடையது வெற்றிக்கு தகுதியானதேனு மனமார பாராட்டுங்கள். அந்த படைப்பாளிக்கு அதுவே போதும்//
இது வாசகர்களுக்கு மட்டுமல்ல, படைப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் பொருந்தும், எத்தனை வலைப்பதிவர்கள், புதிய எழுத்தர்கள் பக்கம் போய் பார்த்திருக்கிறார்கள் என்பதனை புதியவர்களின் பின்னூட்டங்களைப் போய் பார்த்தாலேயே புரியும்.
Thenkoodu Support said,
November 30, 2006 at 7:47 am
Dear ArunKumar,
For your understanding, please read the following posts and related topics.
http://www.thenkoodu.com/blog/2006/09/30/contestvision-ideas/
http://www.thenkoodu.com/blog/2006/10/02/contest-ideas-bloggers-are-voters/
We are not sure whether the readers voting are really of readers are not. This is due to the possibility of duplicate voting. A person could play technically, to vote again and again. Whereas, in case of bloggers, we are sure about the results. (FYI, we do not normally just like that add blogs to Thenkoodu.com, we do little special scrutinizing for the benefit of our visitors)
There were lots of suggestions to completely block the readers voting. We just left it as it is for the benefit of doubt. Since this also leads to confusions like you highlighted, we’ll stop the readers voting totally.
For suggestions and discussions, pls feel free to contact us by mail to our teams address.
Thanks.
Regards,
SurveySan said,
November 30, 2006 at 12:25 pm
thenkoodu support,
I dont think its a good idea to leave off regular readers from voting.
why not get a email ID from the ‘readers’ while voting, and send a ‘click here to activate your vote’ email to the readers inbox.
this way, you can be sure you wont get any duplicate emails.
I dont think anyone will goto the extent of creating multiple emails for just voting in thenkoodu.
thanks,
SurveySan
Thenkoodu Support said,
November 30, 2006 at 1:52 pm
Dear SurveySan,
Already we have the mechanism of verifying email addresses for voting for the contests. We have IP filtering also in place. Thenkoodu voting is one of a techinically reasonable voting mechanism for public. Thats why we still give 20% value for those votes.
For your info:
On september we have got atleast more than 10 ids registered with email addresses as “kallavoteX@gmail.com” etc etc.(replace X with 1 to 10)
Thanks,
SurveySan said,
December 1, 2006 at 9:45 am
thanks for the info.
since you are stopping the contest going forward, I dont have anything else to say.
for December, you could get 6 moderates and have them read 10 random stories each and pick 2 from them, and then have the judges read the selected ones to decide a winner.
You can have a ‘peoples vote’ without any prize attached to it, and open that up for all voters.
just a thought - I think you should continue hosting this contest going forward using the above formula. In the midst of all the ugly posts on caste and creed, the story writing is the only fun part in our tamil blogs today.
If you are giving it up, I will probably try to organize the contest going forward. (you don’t want that do you? :) )
J Chandrasekaran said,
December 2, 2006 at 1:28 am
I have started thinking if only few names get repeatedly ’spotlighted’. the selection mechanismis confusing and a deterrent to contestants :(
நாமக்கல் சிபி said,
December 2, 2006 at 8:55 pm
டிசம்பர் மாதத்திற்கான போட்டி எப்பொழுது அறிவிக்கப்படும்?
(வழக்கம் போல முதல் ஆக்கமாக இருக்க வேண்டுமென்று சிறில் அலெக்ஸ் அவர்கள் தலைப்பை அறிவித்தவுடன் ஆக்கத்தையும் எழுதி முடித்து விட்டேன். )
Thenkoodu Support said,
December 3, 2006 at 12:16 am
Dear Survey Sen,
Thanks for the ideas.. will explore the possibilities in future. We are going to have the readers voting also in place like november month. More changes will not be there since the contest is going to end here.
Thenkoodu Team is made up of friends like you only! we always welcome our ideas being carry forward :-)
Dear J chandran,
Appreciate your views
Dear Sibi,
The annoucement was already on contestants.php from 1st onwards.
நெல்லை சிவா said,
December 3, 2006 at 7:51 am
தேன்கூடு நண்பர்களுக்கு,
போட்டி இம்மாதத்துடன் நிறைவு பெறுவது குறித்து எனக்குச் சற்று வருத்தமே, என்ன காரணத்திற்காக, இப்போட்டிக்கு விடுமுறை கொடுக்க எண்ணியிருக்கிறீர்கள் என்பது புரியாத ஒன்று.
கள்ள ஓட்டும், போட்டி குறித்த சர்ச்சைகளும் ஒரு காரணமாயிருக்கும் என்றால், அதெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல், தொடரலாம்.
சரியோ, தவறோ போட்டின்னு ஒன்னு வச்சு, எல்லோருடைய சிந்தனைக் கதவையும் திறந்து, படைப்புகளை ஆக்க உதவிய தேன்கூடு நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும், வாழ்த்துக்களும்.
யாருக்கு எப்படியோ, எனக்கு இந்தப் போட்டியே, நிறைய படைப்புகளை படைப்பிக்கவும், புதுப்புது வலைநண்பர்களை அடையாளம் காட்டவும் உதவியது என்றால், மிகையில்லை.
அதுக்காகவும் தேன்கூட்டிற்கு ஒரு ‘ஓ’.
Thenkoodu Support said,
December 3, 2006 at 11:13 am
நெல்லை சிவா,
உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
//கள்ள ஓட்டும், போட்டி குறித்த சர்ச்சைகளும் ஒரு காரணமாயிருக்கும் என்றால், //
இவை எதுவும் காரணமல்ல.
அன்புடன்,
தேன்கூடு நண்பர்கள்.
madhumitha said,
December 6, 2006 at 3:16 pm
வாசகர்கள் தேர்வு, வலைப்பதிவர்கள் தேர்வு இரண்டிலும்
‘இரயில் வண்டியில் ஒரு ஹஜ் பயணம் (இலவசமாய்)’
ஐந்தாவதாக தேர்ந்தெடுத்தமைக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடுவர்களுக்கும் எனது நன்றி.