12.31.06
டிசம்பர் ‘06 போட்டி முடிவுகள்
வலைஞர்களுக்கும், வாசகர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். சென்ற வருட டிசம்பர் மாத முதல் வாரத்தில் கருவாக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, மாதத்தின் மத்தியில் வலைப்பதிவர்களால் கண்டுகொள்ளப்பட்டு இன்று உங்கள் அனைவரின் அன்பிற்கும் பாத்திரமாகியிருக்கும் தேன்கூடு தொகுப்பகம் மற்றும் திரட்டியின் முதலாம் ஆண்டு நிறைவினில் உங்களுடன் இணைந்து எங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறோம்! இனி…
டிசம்பர் 2006 வலைப்பதிவுப் போட்டி முடிவுகள்
டிசம்பர் மாதத்தின் தேன்கூடு-தமிழோவியம் போட்டியின் வெற்றிக்கு துணை நின்ற வலைப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி.
போட்டியில் பங்கெடுத்துக்கொண்டு ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் எழுதிய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியில் வெற்றி பெற்ற வலைப்பதிவர்களுக்கு எங்களின் சிறப்புப் பாராட்டுகள்.
பின்னூட்டங்கள் மூலமாகவும், வாக்குப் பதிவில் கலந்து கொண்டு வாக்களித்தும் பதிவர்களை உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் எங்களின் நன்றிகள்.
போட்டி முடிவுகள்:
முதல் பரிசு -
கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை - அரைபிளேடு
இரண்டாவது பரிசு -
குறும்பு - நாமக்கல் சிபி
மூன்றாவது பரிசு -
குறும்பெல்லாம் குறும்பா? - sk
நான்காவது இடத்தில் -
நந்தன் - ராம்
நடுவர் குழுவின் பார்வைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆக்கங்களுக்கும் ஆறுதல் பரிசு உண்டு.
தேன்கூடு-தமிழோவியம் மாதாந்திரப் போட்டிகள் வலைப்பதிவுகளின் சாத்தியக்கூறுகளையும், வலைப்பதிவர்களின் எல்லையற்ற திறமையையும் அவர்கள் பாணியிலேயே சுலபமாக சுவாரசியமாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு பயிற்சிக்களம் என்பது நீங்கள் அறிந்ததே. எழுத்துத்திறனையும் நல்ல எழுத்துக்களையும் உற்சாகப்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் வெற்றி தோல்வியை விட பங்கேற்பு என்பதே திறமையை நிரூபிக்கும் முயற்சி. அந்த விதத்தில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களையும் பாராட்டுவதில் மகிழ்கிறோம்.
போட்டியில் நடுவர்களாகச் செயல்பட இசைந்த சிறில் அலெக்ஸ், பாவண்ணன், வைகை செல்விஆகியோருக்கு எங்களின் நன்றிகள். நடுவர்களின் கணிப்பு மற்றும் போட்டியின் முடிவுகள் குறித்த புள்ளி விபரங்கள் கீழே பெட்டிகளில் காணலாம். ( போட்டியில் வலைப்பதிவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 14 ஆக்கங்கள் மட்டுமே, வாக்கெடுப்பு விபரங்கள் தெரிவிக்கப்படாமல் நடுவர்களுக்கு அனுப்பப்பட்டது. )
‘குறும்பு’ - தலைப்பினைக் கொடுத்ததுடன் மட்டுமல்லாது , அன்புடன் எங்களுடன் ஒத்துழைத்ததற்கும், போட்டி முடிவில் நடுவர்குழுவில் பங்கேற்று மதிப்பிட்டமைக்கும் திரு. சிறில் அலெக்ஸ் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
பாவண்ணன், தமிழ்ச் சிறுகதைகளில் தனித்துவமான கதை சொல்லும் முறை கொண்டவர். பாண்டிச்சேரியில் பிறந்த இவர், தற்போது பெங்களூரில் வசிக்கிறார். கன்னட இலக்கியங்களைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்து, அதற்காக மொழி பெயர்ப்புக்கான ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று நீண்ட எழுத்து இயக்கம் கொண்டவர். இவரது ‘பாய்மரக் கப்பல்’ நாவல் குறிப்பிட்டத்தக்கதாகும். இணையத்திலும் சிறு பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதி வரும் பாவண்ணன், தொலைதொடர்புத் துறையில் வேலை செய்கிறார். குறிப்பு உதவி: எஸ்.ரா
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் முக்கியப்பொறுப்பில் பணிபுரியும் வைகை செல்வி கவிதைகள் கதைகள் என்று பல துறைகளிலும் தடம் பதித்தவர். மதுரையைச் சேர்ந்தவர். ‘வானகமே வையகமே’ என்ற மாசுக்கட்டுபாடு குறித்த
கவிதைகளுடனான உள்சுற்று பத்திரிக்கையை நடத்தி வருகிறார். இவரது பிளாஸ்டிக் மாசுகள் குறித்த புத்தகம் , தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது; மலையாளம்,தெலுங்கு,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.சிறந்த எழுத்தாளர், கவிஞர் போன்ற பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகளும், கவிதைகளும் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது சென்னையில் வசித்து வரும் இவர், கட்டுரைகள் மூலம் தனது கருத்துக்களை எழுதி வருகிறார். கடந்த ஒரு வருடங்களாக ‘அரும்பு’இதழில் தொடர்ந்து எழுதிவருகிறார்.இவர் குறித்து மேலதிக விபரத்திற்கு வாசிக்க: http://www.hindu.com/mp/2006/12/09/stories/2006120901560200.htm
போட்டிக்கான இரண்டாம், மூன்றாம் பரிசுகளை வழங்க இயைந்த சென்னைலைப்ரரி, நிலாஷாப் தளங்களுக்கு எங்களின் நன்றிகள்.
வலைப்பதிவர்களில் திறமையானவர்களை உற்சாகப்படுத்துவதில் நீண்ட முன் அனுபவத்துடன் முன்னிலை வகிக்கும் தமிழோவியத்தின் முழுமையான துணை, ஆர்வம், உதவி இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் போட்டிகள் இவ்வளவு தூரம் களை கட்டியிருக்குமா என்பது சந்தேகமே! இணைய இதழ்களில் படைப்புகள் இடம்பெறுவது கூட இயலலாம். ஆனால், சிறப்பாசிரியர் பதவி என்பது ஒரு சீரிய அங்கீகாரம். சுவையான சுமை. இத்தகைய வாய்ப்பினை வெற்றியாளர்களுக்கு வழங்கி எங்களையும் கெளரவித்த தமிழோவியத்தினருக்கு நாங்கள் நிச்சயம் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். தமிழோவியம் குழுவினருக்கு எங்களின் நன்றிகள். தமிழோவியத்தின் ‘கணேஷ் சந்திரா’ அவர்களுக்கு எங்களின் ‘ஸ்பெஷல்’ நன்றிகள்! மீண்டும் ஒரு வாய்ப்பிருந்தால் சேர்ந்து பணிபுரியும் விருப்பத்துடன், தமிழோவியத்திலிருந்து விடைபெறுகிறோம்! நன்றி நண்பர்களே!!
வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் இது வரை நடைபெற்ற போட்டிகளில் கிடைக்கப்பெற்ற வாய்ப்பினை சிறப்பாகப் பயன்படுத்தி, தமிழின் வளர்ச்சிக்கு தேன்கூடு-தமிழோவியம் நண்பர்களின் முயற்சிக்கு துணை நின்ற இனிய நண்பர்கள் எங்களின் அன்பு வலைப்பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் எங்களின் அன்புகலந்த நன்றிகள்.
போட்டிக்கான பரிசுகளை வழங்குவதனை மிகவும் சுலபமானதாகவும், இனிமையான அனுபவமாகவும் மாற்றிய தமிழ் இணைய புத்தக விற்பனை நிறுவனங்கள், தமிழோவியம்.காம், எனி இந்தியன்.காம், காமதேனு.காம், நிலாஷாப்.காம், விகடன் பிரசுரம் ஆகியவற்றிற்கு எங்களின் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தேன்கூடு-தமிழோவியம் போட்டிகள் இத்துடன் நிறைவு பெற்றன. இனி வரும் மாதங்களில் இன்னமும் பல சிறப்பான சுவையான வாய்ப்புகள் பதிவர்களுக்கு வர இருக்கிறது, அவற்றிலும் கலந்து கொண்டு, பதிவர்களை உற்சாகப்படுத்துமாறு வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் நட்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முன்னரே அறிவித்தபடி இதுவரை நடைபெற்ற போட்டிகளைச் சிறப்பிக்கச் செய்த சில வலைஞர்களுக்கான அங்கீகாரப் பரிசுகளை வழங்க இருக்கிறோம். அது குறித்த அறிவிப்பு சில தினங்களில் வெளிவரலாம். வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவர் பெயரும் சில தினங்களில் வெளியிடப்படும்.
மற்றபடி,
தேன்கூட்டிற்கும், தமிழோவியத்திற்கும் போட்டிகள் குறித்த உங்களது கருத்துக்களை அனுப்பி வையுங்கள். உங்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களுக்காகவே காத்திருக்கிறோம்.
நன்றி, வணக்கம்.
நட்புடன்,
தேன்கூடு நண்பர்கள் குழுமம்.
வலைப்பதிவர்களின் மதிப்பீடுகள்:
| 100% | ||
|---|---|---|
| 1 | கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை - அரைபிளேட | 27% |
| 2 | குறும்பு - நாமக்கல் சிபி | 24.3% |
| 3 | கப்பிப்பயல் - ஓகை | 24.3% |
| 4 | ஹிந்தி ஒயிக.. எக்சாம் ஹால் அக்குறும்பு.. - araiblade | 21.6% |
| 5 | நந்தன் - ராம் | 21.6% |
| 6 | அக்குறும்பு ! - கோவி.கண்ணன் | 18.9% |
| 7 | ஒரு காதல் பயணம் - 7 (தேன்கூடு போட்டிக்கும்) - அருட்பெருங்கோ | 18.9% |
| 8 | குறும்பு-செந்தில் குமரன் | 16.2% |
| 9 | மறுபக்கம் - பினாத்தல் சுரேஷ் | 16.2% |
| 10 | காதல் வந்துடுச்சி … - கோவி.கண்ணன் | 16.2% |
| 11 | வாலிபக்குறும்பு (தேன்கூடு போட்டிக்காக) - mdsultan | 16.2% |
| 12 | குறும்பெல்லாம் குறும்பா? - sk | 16.2% |
| 13 | குறும்பு செய்ய விரும்பு - சதீஷ் | 16.2% |
| 14 | ஆக வேண்டுமா வலைப்பதிவர் Gameshow - பினாத்தல் சுரேஷ் | 16.2% |
இந்த மாதம் நடந்த ஓட்டெடுப்பின் முழுமையான விபரங்களை காண: வலைப்பதிவர் மதிப்பீடுகள்
நடுவர் குழுவின் மதிப்பீடுகள்:
| 1 | கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை - அரைபிளேட | 92 | 35 | 80 |
| 2 | குறும்பு - நாமக்கல் சிபி | 77 | 55 | 62 |
| 3 | கப்பிப்பயல் - ஓகை | 77 | 50 | 45 |
| 4 | ஹிந்தி ஒயிக.. எக்சாம் ஹால் அக்குறும்பு.. - araiblade | 65 | 35 | 55 |
| 5 | நந்தன் - ராம் | 91 | 45 | 60 |
| 6 | அக்குறும்பு ! - கோவி.கண்ணன் | 65 | 40 | 53 |
| 7 | ஒரு காதல் பயணம் - 7 (தேன்கூடு போட்டிக்கும்) - அருட்பெருங்கோ | 82 | 40 | 57 |
| 8 | குறும்பு-செந்தில் குமரன் | 77 | 50 | 50 |
| 9 | மறுபக்கம் - பினாத்தல் சுரேஷ் | 88 | 40 | 55 |
| 10 | காதல் வந்துடுச்சி … - கோவி.கண்ணன் | 62 | 35 | 68 |
| 11 | வாலிபக்குறும்பு (தேன்கூடு போட்டிக்காக) - mdsultan | 67 | 40 | 40 |
| 12 | குறும்பெல்லாம் குறும்பா? - sk | 84 | 50 | 75 |
| 13 | குறும்பு செய்ய விரும்பு - சதீஷ் | 60 | 40 | 65 |
| 14 | ஆக வேண்டுமா வலைப்பதிவர் Gameshow - பினாத்தல் சுரேஷ் | 70 | 40 | 65 |
இறுதி முடிவுகள்:
| 100% | ||
|---|---|---|
| 1 | கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை - அரைபிளேட | 52.2% |
| 2 | குறும்பு - நாமக்கல் சிபி | 48.52% |
| 12 | குறும்பெல்லாம் குறும்பா? - sk | 48.28% |
| 5 | நந்தன் - ராம் | 47.84% |
| 3 | கப்பிப்பயல் - ஓகை | 44.12% |
| 7 | ஒரு காதல் பயணம் - 7 (தேன்கூடு போட்டிக்கும்) - அருட்பெருங்கோ | 43.36% |
| 9 | மறுபக்கம் - பினாத்தல் சுரேஷ் | 43.08% |
| 8 | குறும்பு-செந்தில் குமரன் | 41.88% |
| 14 | ஆக வேண்டுமா வலைப்பதிவர் Gameshow - பினாத்தல் சுரேஷ் | 41.48% |
| 4 | ஹிந்தி ஒயிக.. எக்சாம் ஹால் அக்குறும்பு.. - araiblade | 39.64% |
| 10 | காதல் வந்துடுச்சி … - கோவி.கண்ணன் | 39.48% |
| 13 | குறும்பு செய்ய விரும்பு - சதீஷ் | 39.48% |
| 6 | அக்குறும்பு ! - கோவி.கண்ணன் | 39.16% |
| 11 | வாலிபக்குறும்பு (தேன்கூடு போட்டிக்காக) - mdsultan | 35.88% |
Vaasagar voting was extreamly less in this time(13 votes)

பாவண்ணன், தமிழ்ச் சிறுகதைகளில் தனித்துவமான கதை சொல்லும் முறை கொண்டவர். பாண்டிச்சேரியில் பிறந்த இவர், தற்போது பெங்களூரில் வசிக்கிறார். கன்னட இலக்கியங்களைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்து, அதற்காக மொழி பெயர்ப்புக்கான ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்கிலுக் said,
January 2, 2007 at 10:03 am
வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!
மீண்டும் புதிய வடிவிலான போட்டியை தேன்கூடு நிர்வாகத்திடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
ஓகை நடராஜன் said,
January 2, 2007 at 11:35 am
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். போட்டியை நடத்திய தேன்கூடு மற்றும் தமிழோவியம் நண்பர்களுக்கு என் நன்றி.
போட்டி முடிவடைந்தது சற்று சோகமாகவே இருக்கிறது. ஆனால்
//இன்னமும் பல சிறப்பான சுவையான வாய்ப்புகள் பதிவர்களுக்கு வர இருக்கிறது,//
என்று சொல்லியிருப்பது ஆறுதலாக இருக்கிறது.
பலரின் திறமைகளை வெளிக்கொணரும் அருமையான இது போன்ற முயற்சிகள் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு ஏணிப்படிகளாக அமையும்.
சீனு said,
January 9, 2007 at 2:55 pm
போட்டியைப் பற்றி எங்கு தெரிந்து கொள்வது?