வகைப்படுத்தல் எவ்விதம்?
வகைப்படுத்தல்(Categorizing) எவ்விதம்?
ஏற்கனவே தேன்கூட்டில் திரட்டப்படும் வலைப்பதிவை ஒருவர் வகைப்படுத்தல்(Category) செய்ய வேண்டுமென்றால், தளத்தில் உள்நுழைந்து, வலைப்பதிவினை இணைக்க வேண்டும். அப்பொழுது, முன்னரே உள்ள தளம் என்று சொல்லி, ‘அதிகாரம் எடுத்துக்கொள்ளக்’ கேட்கப்படும். அவசியமிருப்பின் மின்னஞ்சல் மூலமூம் தொடர்பு கொள்வோம் என்பதைத் தெரிவிக்கும்.. அவ்வாறு செய்யும் பட்சத்தில் தளம் இணைக்கப்படும். இது போல தேன்கூட்டில் இணைக்கப்ப்டும் ஏற்கனவே உள்ள பதிவுகளின் இணைப்பு இப்பொழுதைக்கு தானியங்கியாக இருக்கிறது.நேரடியாக தேன்கூட்டில், புதிதாக இணைக்கப்ப்டும் பதிவுகள் நிர்வாகத்தினரால் சோதிக்கப்பட்டு இணைக்கப்படுகிறது.
இப்படி வகைப்படுத்தப்பட்ட வலைப்பதிவுகளிலுள்ள பதிவுகளை மட்டும் படிக்கும் வழியும் இருக்கிறது. ஒவ்வொரு ‘Category’ பக்கங்களிலும் ‘Click Here to view posts from this category’ என்ற தொடுப்பு இருக்கும். இதன் மூலம் நீங்கள் அந்த குறிப்பிட்ட வகைப்படுதலின் கீழ் வரும் வலைப்பதிவுகளிலிருந்து மட்டும் இடுகைகளை படிக்க முடியும்.
வகைப்படுத்துதலில், ‘one to many’ என்ற முறை கையாளப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு வலைப்பதிவு ‘அரசியல், பொது, வாழ்க்கை, திரைவிமர்சனம்’ இப்படி பல விசயங்கள் எழுதப்படலாம் என்பதால், இந்த வலைப்பதிவு இந்த வகைப்பட்டியல்கள் (Categories) அனைத்திலும் பட்டியிலிடப்படும், பார்வையிடப்படும். அதுவும் தவிர ‘tagging’ மூலமாக வகை செய்யப்படாத குறிப்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். உதாரணத்திற்கு: ‘கோவில்பட்டி’, ‘தென்றல் நற்பணி மன்றம்’ என்று சில சொற்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம். உங்களைப் போலவே சொற்கள் இணைத்துக்கொள்ளும் நண்பர்களை குழுவாக்கிக் கொள்ள முடியும்.
